அரசியல் செய்தி

தமிழ்நாடு

அகத்தீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை- -''ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய கோவில்கள் கண்டறியப்பட்டு, திருப்பணி நடத்தப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.கும்பாபிஷேகம் சென்னை, வில்லிவாக்கம் தேவி பாலியம்மன், சவுமிய தாமோதர பெருமாள், அகத்தீஸ்வரர் கோவில்களில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு
 அகத்தீஸ்வரர் கோவிலில்  அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை- -''ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய கோவில்கள் கண்டறியப்பட்டு, திருப்பணி நடத்தப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கும்பாபிஷேகம் சென்னை, வில்லிவாக்கம் தேவி பாலியம்மன், சவுமிய தாமோதர பெருமாள், அகத்தீஸ்வரர் கோவில்களில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு நடத்தினார்.பின், அவர் அளித்த பேட்டி:அகத்தீஸ்வரர் கோவில் 1000 ஆண்டுகளும், சவுமியதாமோதர பெருமாள் கோவில் 250 ஆண்டுகளும், தேவி பாலியம்மன் கோவில் 90 ஆண்டுகளும் பழமையானவை.ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்காத கோவில்களை கண்டறிந்துதிருப்பணி நடத்தி, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.திருப்பணி முடிந்த கோவில்களில், பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். தேவி பாலியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.அறிவுரைஅக்கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தேர் சீரமைக்கப்படும். ஆகம விதிப்படி சன்னிதானங்கள் மாற்றி அமைக்கப்படும்.

அதேபோல, சவுமியதாமோதர பெருமாள் கோவிலின் முகப்பில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். திருக்குளம், தேர், நந்தவனம் சீரமைக்கப்படும். அகத்தீஸ்வரர் கோவிலில் அன்னதானக் கூடம், யாக சாலை பராமரிக்கப்படும். மேலும், கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை சீரமைக்க, திட்ட மதிப்பீடு தயாரித்துஅனுப்ப அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது, அறநிலையத் துறை கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adimai tharuthalai - Trichy,இந்தியா
01-ஆக-202106:31:05 IST Report Abuse
adimai tharuthalai ஆட்டு சந்தைக்குள்ளே ஓநாய்க்கு என்ன வேலை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X