நீர் நிலையில் காற்றாலை: அரசுக்கு உத்தரவு!| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர் நிலையில் காற்றாலை: அரசுக்கு உத்தரவு!

Added : ஆக 01, 2021
Share
சென்னை-நீர் நிலைகள், சாலைகளை ஆக்கிரமித்து காற்றாலை நிறுவப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல், நீர் நிலைகள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து, 349 காற்றாலைகளை தனியார் நிறுவனம் அமைத்து வருவதை எதிர்த்து, சுரேஷ் என்பவர் மனு தாக்கல்

சென்னை-நீர் நிலைகள், சாலைகளை ஆக்கிரமித்து காற்றாலை நிறுவப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல், நீர் நிலைகள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து, 349 காற்றாலைகளை தனியார் நிறுவனம் அமைத்து வருவதை எதிர்த்து, சுரேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி அமர்வில், விசாரணைக்கு வந்தது.

தனியார் நிறுவனம் சார்பில், 'மத்திய அரசு நிறுவனம், காற்றாலைகளை அமைக்க அனுமதி வழங்கி உள்ளது. 125 காற்றாலைகளுக்கு கம்பம் நிறுவப்பட்டுள்ளது. வழக்குகளால், குறிப்பிட்ட காலத்துக்குள் அமைக்க முடியவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, நீதிபதிகள், 'மாற்று எரிசக்தி திட்டங்கள், மிகவும் அவசியம் தான். அதற்காக, நீர் நிலைகள், சாலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது' என, அறிவுறுத்தினர்.மனு குறித்து அறிக்கை அளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X