அரசியல் செய்தி

தமிழ்நாடு

அகதிகளுக்கு குடியுரிமை: ராமதாஸ் வலியுறுத்தல்

Added : ஆக 01, 2021
Share
Advertisement
சென்னை-'இலங்கை தமிழ் அகதிகளுக்கு, குடியுரிமை வழங்கக்கோரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:'தமிழகத்தில் வாழும், இலங்கை தமிழ் அகதிகள் அனைவரும், சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது' என, மத்திய அரசு

சென்னை-'இலங்கை தமிழ் அகதிகளுக்கு, குடியுரிமை வழங்கக்கோரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:'தமிழகத்தில் வாழும், இலங்கை தமிழ் அகதிகள் அனைவரும், சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாடு மனிதநேயமற்றது. இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. எங்கு மனித உரிமை மீறல்கள் நடந்தாலும், உடனடியாக குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது.

அத்தகைய நாடு, அகதிகளுக்கு வாழ்வளிப்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடாததும், அவர்களை சட்ட விரோத குடியேறிகள் என, கூறுவதும், இந்தியாவின் உயரத்திற்கு ஏற்றதல்ல.பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் கொடுமைகளுக்கு உள்ளாகி, இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் போது, இலங்கையிலிருந்து வந்த, தமிழ் அகதிகளுக்கு மட்டும் மறுக்கப்படுவது சரியல்ல.எனவே, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X