சென்னை-வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், 'பிக் பஜார்' நிறுவனம் சார்பில், 'மஹாபச்சட்' என்ற பெயரில் 3,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை முன்பதிவு செய்பவர்களுக்கு, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
'பியூச்சர்' குழுமத்தை சேர்ந்த பிக் பஜார், நாடு முழுதும், 150 நகரங்களில், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச மதிப்பை வழங்கி வருகிறது.தற்போது, மஹாபச்சட் என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் பல்வேறு சலுகைளை அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக 3,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, பிக் பஜார் ஸ்டோர் அல்லது அதன் மொபைல் செயலி, இணையதளத்தில், 'ஆன்லைன்' விற்பனை வாயிலாக முன்பதிவு செய்யலாம்.முன்பதிவு செய்வோருக்கு, 5 கிலோ கோதுமை மாவு, தலா 1 கிலோ பருப்பு, அரிசி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். நேற்று துவங்கிய முன்பதிவு, வரும் 8ம் தேதி வரை இருக்கும். அதில், உணவு, பேஷன், வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களை முன்பதிவு செய்யலாம். அவற்றை 9ம் தேதி முதல், 15ம் தேதி வரை பெற்று கொள்ளலாம்.
இதுகுறித்து, பியூச்சர் குழுமத்தின், 'டிஜிட்டல்' சந்தைப்படுத்துதல், இணையதள வணிக தலைமை அதிகாரி பவன் சர்தா கூறியதாவது:ஆண்டின் முக்கியமான விற்பனை நிகழ்வாக, மஹாபச்சட் விளங்குகிறது. எங்கள் குடும்ப உறுப்பினர்களான வாடிக்கையாளர்களுக்கு, அதிகபட்ச மதிப்பை மீண்டும் வழங்குவதே, எங்களின் குறிக்கோள். இந்த முறை சலுகையாக முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்களுக்கு, அனைத்து வீடுகளிலும் முக்கிய தேவையாக உள்ள அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE