பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஆர்.ஓ.,க்கள் 30 பேர் இடமாற்றம்

Added : ஆக 01, 2021
Share
Advertisement
சென்னை-மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் உட்பட, 30 பி.ஆர்.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். செய்தி மக்கள் தொடர்பு துறையில், அ.தி.மு.க., ஆட்சியில் பணியில் சேர்ந்தவர்கள், தி.மு.க., ஆட்சியில் பணியில் சேர்ந்தவர்கள் என, அனைத்து வகையான அலுவலர்களும், இரு பிரிவாக உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சி வரும் போது, அ.தி.மு.க., ஆட்சியில் சேர்ந்தவர்கள் முக்கிய பதவியில் இருப்பதும், தி.மு.க.,

சென்னை-மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் உட்பட, 30 பி.ஆர்.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். செய்தி மக்கள் தொடர்பு துறையில், அ.தி.மு.க., ஆட்சியில் பணியில் சேர்ந்தவர்கள், தி.மு.க., ஆட்சியில் பணியில் சேர்ந்தவர்கள் என, அனைத்து வகையான அலுவலர்களும், இரு பிரிவாக உள்ளனர்.

அ.தி.மு.க., ஆட்சி வரும் போது, அ.தி.மு.க., ஆட்சியில் சேர்ந்தவர்கள் முக்கிய பதவியில் இருப்பதும், தி.மு.க., ஆட்சி வரும் போது, தி.மு.க., ஆட்சியில் பணியில் சேர்ந்தவர்கள், முக்கிய பதவி வகிப்பதும் வாடிக்கை.இம்முறை தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், வழக்கம் போல செய்தி மக்கள் தொடர்பு துறையில், உடனடியாக மாற்றம் வரும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முக்கிய பதவிகளை பெறுவதில், தி.மு.க., ஆதரவு அலுவலர்கள் இடையே, கடும் போட்டி எழுந்ததால், யாரை நியமிப்பது என்ற சிக்கல் எழுந்தது.எனவே, இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என, படிப்படியாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முக்கிய பணிக்கு வரலாம் என்று எதிர்பார்த்தவர்கள், அந்த ஆசை நிறைவேறாததால், கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகினர். இடமாற்றம் முறையாக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்தச் சூழ்நிலையில், நேற்று முன்தினம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், ௩௦ பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை தலைமை செயலக, செய்தி மக்கள்தொடர்பு அலுவலராக, முத்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 25 பேர் மாவட்டங்களுக்கு, பி.ஆர்.ஓ.,க்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.தற்போது, இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் வகித்த பதவிகளிலும், அவர்கள் பதவியேற்க உள்ள இடங்களில், ஏற்கனவே பணியில் இருந்த பலருக்கும், பணியிடம் ஒதுக்கப்படாமல் உள்ளது.இதிலும் பலர், தாங்கள் கேட்ட இடங்களுக்கு பணியிடம் வழங்கவில்லை என்று, அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X