பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பதிவேற்ற உத்தரவு

Added : ஆக 01, 2021
Share
Advertisement
சென்னை-'குரூப் - 1 தேர்வில், முதனிலை தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை, தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஜன., 3ம் தேதி, 'குரூப் - 1' பணிகளுக்கான முதனிலை தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதியவர்களில், தமிழ்

சென்னை-'குரூப் - 1 தேர்வில், முதனிலை தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை, தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஜன., 3ம் தேதி, 'குரூப் - 1' பணிகளுக்கான முதனிலை தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதியவர்களில், தமிழ் வழியில் படித்ததாக விண்ணப்பத்தில் தெரிவித்தவர்கள், அதற்கான சான்றிதழ்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தேர்வாணைய இணையதளத்தில் அதற்கான படிவம், வரும் 5ம் தேதி வெளியிடப்படும். அதில், முதல் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை; பிளஸ் 1, பிளஸ் 2, அல்லது பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு ஆகியவற்றில், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை, 'ஸ்கேன்' செய்து, வரும் 16ம் தேதி முதல், செப்., 19 வரை, வேலை நாட்களில், அரசு, 'இ - சேவை' மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.இது குறித்த தகவல், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'இ - மெயில்' வழியாக தெரிவிக்கப்படும்.

தேர்வாணைய இணையதளம் வழியாகவும், இது குறித்த குறிப்பாணையை, 5ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை என்றால், அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X