பொது செய்தி

தமிழ்நாடு

உலக தாய்ப்பால் வாரம் முதல்வர் வேண்டுகோள்

Added : ஆக 01, 2021
Share
Advertisement
சென்னை-'குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும்' என, உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்து செய்தி:இன்று முதல் அடுத்த ஏழு தினங்கள், உலக தாய்ப்பால் வார விழாவாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 'மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால், மாநிலம் செழிக்கும்' என்பதை கருத்தில் வைத்து, தாய்க்கும்,

சென்னை-'குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும்' என, உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தி:இன்று முதல் அடுத்த ஏழு தினங்கள், உலக தாய்ப்பால் வார விழாவாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 'மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால், மாநிலம் செழிக்கும்' என்பதை கருத்தில் வைத்து, தாய்க்கும், சேய்க்கும் பல நலத் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.குழந்தையின் முதல் 1,00௦ நாட்கள், அதாவது தாயின் வயிற்றில் கரு உருவானது முதல், இரண்டு வயது வரையிலான நாட்கள், அந்தக் குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கிறது என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த முதல் 1,000 நாட்களில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த வாரம், உலக தாய்ப்பால் வாரம். தாய்ப்பாலின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் தருணத்தில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தவறாமல் தாய்ப்பால் அளிக்க வேண்டும்.ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். ஆறாம் மாதம் முதல், தாய்ப்பாலுடன் இணை உணவும் தொடர்ந்து கொடுங்கள் என்றும் கனிவோடு, ஒரு சகோதரனாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X