பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்களுக்கு கோவிட் பரிசோதனை

Added : ஆக 01, 2021
Share
Advertisement
சென்னை-சட்டசபை நுாற்றாண்டு விழாவில் பங்கேற்போருக்கு, கொரோனா பரிசோதனை செய்யும் பணி நேற்று துவங்கியது.தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா, கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா, நாளை மாலை, 5:00 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் பங்கேற்க

சென்னை-சட்டசபை நுாற்றாண்டு விழாவில் பங்கேற்போருக்கு, கொரோனா பரிசோதனை செய்யும் பணி நேற்று துவங்கியது.

தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா, கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா, நாளை மாலை, 5:00 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் பங்கேற்க உள்ளனர்.

அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டும், விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள நபர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி, நேற்று துவங்கியது.தலைமை செயலகத்தில், விழா அரங்கிற்குள் செல்ல உள்ள அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு, நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது. எம்.எல்.ஏ.,க்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. கொரோனா பரிசோதனையில், நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டும், விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X