பொது செய்தி

தமிழ்நாடு

மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் விழா

Added : ஆக 01, 2021
Share
Advertisement
கோவை-மாவீரன் தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவு நாள் விழா, ஆடிப்பெருக்கு தினமான ஆக., 3ம் தேதி ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் நடக்கிறது. தீரமுடன் போரிட்ட வீரர்தற்போதைய ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் ரத்தினசாமி கவுண்டர்- பெரியாத்தாளுக்கு மகனாக, 1756ல் பிறந்தவர் தீர்த்தகிரி கவுண்டர். வாள், சிலம்பம், மல்யுத்தம் என அனைத்து போர் பயிற்சிகளையும் கற்று
 மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் விழா

கோவை-மாவீரன் தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவு நாள் விழா, ஆடிப்பெருக்கு தினமான ஆக., 3ம் தேதி ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் நடக்கிறது.

தீரமுடன் போரிட்ட வீரர்தற்போதைய ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் ரத்தினசாமி கவுண்டர்- பெரியாத்தாளுக்கு மகனாக, 1756ல் பிறந்தவர் தீர்த்தகிரி கவுண்டர். வாள், சிலம்பம், மல்யுத்தம் என அனைத்து போர் பயிற்சிகளையும் கற்று தேறினார்.அப்போது கொங்கு நாட்டு பகுதிகள், மைசூர் ஆட்சி நிர்வாகத்தில் இருந்தன. வரி வசூலிக்கும் தண்டல்காரர்கள், வரிப்பணத்தை மைசூர் கொண்டு சென்றபோது, வரிப்பணத்தை பறித்த தீர்த்தகிரி, 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் இருக்கும் சின்னமலை பறித்துக் கொண்டதாக சொல்' என, தண்டல்காரரரிடம் கூறி அனுப்பினார்.அன்று முதலே தீர்த்தகிரியின் பெயர், சின்னமலை என்று வழங்க ஆரம்பித்தது. சொந்தமாக படை திரட்டிய சின்னமலை, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.ஹைதர் அலியின் மறைவுக்கு பின், மைசூரில் ஆட்சி பொறுப்பேற்ற திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் நடத்தி வந்தார். அவரது வெற்றிகளுக்கு சின்னமலையின் கொங்கு நாட்டுப் படையினர் பேருதவி புரிந்தனர்.திப்பு சுல்தான் மரணத்துக்கு பின், ஈரோடு மாவட்டம் அரச்சலுார் அருகே ஓடாநிலையில் கோட்டை கட்டிக் கொண்ட சின்னமலை, தன்னை பாளையக்காரராக அறிவித்து, கொங்குநாட்டு பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முயற்சித்தார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801ல் ஈரோடு காவிரி கரையிலும், 1802ல் ஓடாநிலையிலும், 1804ல் அரச்சலுாரிலும் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். அவரை சாதாரணமாக வெல்ல முடியாது என முடிவு செய்த ஆங்கிலேய படையினர், ஓடாநிலை கோட்டையை தகர்க்க, பீரங்கிகளுடன் பெரும் படையினரை அழைத்து வந்தனர். சூழ்ச்சியால் சின்னமலையை கைது செய்தனர். சங்ககிரி கோட்டைக்கு கொண்டு சென்று, கண் துடைப்புக்கு விசாரணை நடத்தி, 1805 ஜூலை 31ல் அவரை துாக்கிலிட்டனர்.தன் வாழ்நாளில் பெரும்பகுதியை போர்களில் செலவிட்டிருந்தாலும், சின்னமலை கோவில்களுக்கு செய்த திருப்பணிகள் அளப்பரியவை. அவர் அளித்த கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன.

தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றும் வகையில், தமிழக அரசு சென்னையில் அவரது உருவச்சிலையை நிறுவியுள்ளது. ஓடாநிலை கோட்டையில் சின்னமலை நினைவு மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.தீரன் சின்னமலை துாக்கிலிடப்பட்ட சங்ககிரியில், அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு, 'தீரன் சின்னமலை மாளிகை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிறந்தநாள், நினைவு நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் தீரன் சின்னமலைக்கு புகழ் அஞ்சலி செலுத்துகின்றனர்.நடப்பாண்டு நினைவு நாள் விழா ஆக., 3ல் ஓடாநிலை கிராமத்தில் நடக்கிறது.நுால் வெளியீடுஆடிப்பெருக்கு தினம் ஆக., 3ல் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 8:00 மணிக்கு ஓடாநிலை தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், மலர் துாவி வழிபாடு நடக்கிறது.காலை 9:00 மணிக்கு புலவர் குழந்தை எழுதிய, 'தீரன் சின்னமலையின் வரலாற்று நுால்' ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது. காலை 9:30 மணிக்கு புலவர் குழந்தையின், 'தீரன் சின்னமலை வரலாற்று நுால்' மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி பெயர்ப்பு துவக்க விழா நடக்கிறது. இந்த நுால் வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு பணியை உடுமலை கொங்கு ஆய்வு மையத்தினர் செய்துள்ளனர்.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், பழநி ஆதினம் பரிதி சாது சண்முக அடிகள் பங்கேற்கின்றனர். 'கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, அரசு வழிகாட்டுதல்படி நிகழ்வுகள் நடைபெறும்' என விழா ஏற்பாடுகளை செய்துள்ள ஓடாநிலை, ஜெயராமபுரம், தீரன் சின்னமலை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X