பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' கட்டுரையை வழக்காக எடுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

Added : ஆக 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
செங்கல் சூளைகளின் விதிமீறல் தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் வெளியான தொடர் கட்டுரையை, தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து, வழக்காக எடுத்துக் கொண்டது.கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் 197 செங்கல் சூளைகள் இயங்கி வந்தன.பணம் காய்க்கும் மரம்சூளைகளுக்காக, சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம்,

செங்கல் சூளைகளின் விதிமீறல் தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் வெளியான தொடர் கட்டுரையை, தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து, வழக்காக எடுத்துக் கொண்டது.

கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் 197 செங்கல் சூளைகள் இயங்கி வந்தன.பணம் காய்க்கும் மரம்சூளைகளுக்காக, சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை ஊராட்சிகளில் உள்ள பட்டா மற்றும் அரசு நிலங்களில், அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டு வந்தது. கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு இந்த செங்கல் சூளைகள் பணம் காய்க்கும் மரமாக இருந்தன. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் ஐந்து நாட்கள் தொடர் கட்டுரை வெளியிடப்பட்டது. இந்த கட்டுரையை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டலக் கிளை, தானாக முன் வந்து வழக்காக எடுத்துள்ளது. தீர்ப்பாயத்தின் நீதிபதி ராமகிருஷ்ணன், தொழில் நுட்ப உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுஉள்ளனர்.நோட்டீஸ்அரசின் தலைமைச் செயலர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர், தொழில் துறை செயலர், மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், கோவை கலெக்டர் மற்றும் ஐந்து கிராம ஊராட்சிகளின் தலைவர்கள் 12 பேருக்கு இந்த 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 10ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.'கூடுதல் கால அவகாசம்' இந்த விவகாரம் தொடர்பாக, கலெக்டர் தலைமையில் கூட்டு கமிட்டி அமைத்து, ஆய்வு செய்து ஜூலை 16க்குள் அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், ஜூலை 15ம் தேதி, பசுமை தீர்ப்பாயத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் சமீரன் கூறியதாவது:அறிக்கையில் 197 செங்கல் சூளைகளும் மூடப்பட்டுள்ளன என்ற விபரம் மட்டுமே தரப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், உடனடியாக கமிட்டி அமைக்க இயலவில்லை என்பதால், அரசின் சார்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணையில், தீர்ப்பாயம் தரும் உத்தரவின் அடிப்படையில், கமிட்டி அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ellar - New Delhi,இந்தியா
08-ஆக-202108:15:43 IST Report Abuse
ellar தினமலர் செய்துள்ளது மகத்தான சேவை. பாதிக்கப்பட்ட கிராமத்தில் வசிக்கும் ஆதரவற்ற மக்களின் நன்றியுணர்வு பதிப்பாளரின் குடும்பம் பல தலைமுறை நன்கு வாழ உதவிடும். கிரேட்👌👌👌
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X