தமிழ்நாடு

ஜனாதிபதி வருகை 7,000 போலீஸ் பாதுகாப்பு

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை-நாளை ஜனாதிபதி வருகையை ஒட்டி, 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி படத் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லியில் இருந்து விமானம் வாயிலாக, நாளை பகல் 12:45 மணிஅளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கிண்டி ராஜ்பவனுக்கு செல்லும் அவர்,
 ஜனாதிபதி வருகை 7,000 போலீஸ் பாதுகாப்பு

சென்னை-நாளை ஜனாதிபதி வருகையை ஒட்டி, 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி படத் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லியில் இருந்து விமானம் வாயிலாக, நாளை பகல் 12:45 மணிஅளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கிண்டி ராஜ்பவனுக்கு செல்லும் அவர், அதன்பின், சட்டசபை நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில், 2ம் தேதி முதல், 3ம் தேதி காலை வரை, சென்னையில் ஜனாதிபதி இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜனாதிபதி செல்லும் வழிதடங்களில் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க, சில மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஆக-202112:11:55 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 ......
Rate this:
Cancel
01-ஆக-202109:41:16 IST Report Abuse
அப்புசாமி சொந்த ஊருக்கு ரயிலில் போனாரே... இங்கே 7000 போலீஸ் பாதுகாப்பு. ஏற்கனவே முடக்கி வெச்சிருக்கும் மக்களை இவர் வருகை மேலும் முடக்கும். காணொளி மூலம் திறந்து வெக்கலாமே... நல்ல வேளை இவருக்கு காசு கொடுத்து ஆளுங்களை லாரியில் கொண்டார மாட்டாங்க. கொரோனாவை பரப்ப மாட்டார்னு நம்பலாம். ஆனா, விதி யாரை விட்டது?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
01-ஆக-202108:30:47 IST Report Abuse
Sampath Kumar எந்த பாத்து காப்போம் இல்லாமல் என்றைக்கு தான் நீங்க வாயெல்லாம் வருமிறீர்களோ அன்றைக்கு தான் இந்த நாடு முழு சுதந்திரம் பெற்றதாக கருத படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X