சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அப்படி சொல்லவே இல்லையே!

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 01, 2021
Share
Advertisement
'எப்போதுமே பாராட்டு மழையில் நனைந்த அவர், தற்போது அவதுாறு மழையில் நனைய வேண்டியதாகி விட்டதே' என, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ராவைப் பற்றி பரிதாபத்துடன் கூறுகின்றனர் சக எம்.பி.,க்கள்.இவர், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார்.கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று
 அக்கம் பக்கம்

'எப்போதுமே பாராட்டு மழையில் நனைந்த அவர், தற்போது அவதுாறு மழையில் நனைய வேண்டியதாகி விட்டதே' என, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ராவைப் பற்றி பரிதாபத்துடன் கூறுகின்றனர் சக எம்.பி.,க்கள்.
இவர், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார்.கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பார்லிமென்டிற்குள் நுழைந்த இவர், தன் அனல் பறக்கும் பேச்சால் எதிர்க்கட்சி தலைவர்களின் பாராட்டுகளை பெற்றார். மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து ஆவேசமாக இவர் பேசியது, சமூக வலைதளங்களில் வெளியானதால், நாடு முழுதும் அடையாளம் காணக்கூடிய அரசியல்வாதியாக இவர் மாறினார்.

இப்படி பாராட்டு மழையில் நனைந்த மொய்த்ரா, இப்போது சிக்கலில் மாட்டியுள்ளார். பீஹாரைச் சேர்ந்த நிஷிகாந்த் துபே என்ற பா.ஜ., - எம்.பி.,யை, 'பீஹாரி குண்டர்' என, இவர் விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கட்சி வேறுபாடு இன்றி, வட மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் மொய்த்ராவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 'வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா...' என ஆவேசப்படுகின்றனர். மஹுவா மொய்த்ராவோ, 'நான் அப்படி சொல்லவே இல்லை. என்னை நம்புங்கள்...' என, அழுது புலம்புகிறார்.


காத்திருக்கும் கூட்டம்!


'ஆரம்பம் அமர்க்களமாகத் தான் இருக்கு; ஆனால் இவரை இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்க விடுவரா...' என, கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையைப் பற்றி கூறுகின்றனர், அம்மாநில மக்கள்.

பா.ஜ., மேலிடத்தின் எதிர்ப்பு, அதிருப்தியாளர்களின் உள்ளடி வேலைகளை சமாளித்து எடியூரப்பாவால் இரண்டு ஆண்டுகள் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடிந்தது. வயதை காரணம் காட்டி ஒருவழியாக அவரை முதல்வர் பதவியில் இருந்து துாக்கி அடித்து விட்டனர். புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையும், எடியூரப்பாவின் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் தான்.

பா.ஜ., மேலிடத்துக்கு நெருக்கமானவர். ஆனாலும் எடியூரப்பா போல், இவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. இது பசவராஜ் பொம்மைக்கும் நன்றாக தெரியும். இதனால் தன்னை செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக காட்டுவதற்கான அதிரடி வேலைகளைத் துவக்கியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தர கன்னடா மாவட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சமீபத்தில் களத்தில் இறங்கினார் பொம்மை.

இடுப்பளவு தண்ணீருக்குள் நடந்து சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இதைப் பார்த்த மக்கள், 'சாதாரண மக்களின் முதல்வராக இருப்பார் போலிருக்கிறதே' என, மகிழ்ச்சி தெரிவித்தனர். 'பில்டப் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் உட்கட்சி பூசலை ஏற்படுத்தி, பசவராஜ் பொம்மையை முதல்வர் பதவியிலிருந்து துாக்குவதற்கு ஒரு கூட்டம் காத்திருக்கு...' என எச்சரிக்கின்றனர் அவரது விசுவாசிகள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X