'கல்வெட்டு பிரிவை வலிமைப்படுத்துவது அவசியம்'

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
'பிரதமரே, கல்வெட்டு பிரிவை காப்பாற்றுங்கள்' என்ற பதாகையை கையில் பிடித்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, பல மூத்த வரலாற்று ஆய்வாளர்களும், கல்வெட்டியல் அறிஞர்களும், சமூக வலைதளங்களில் வெளியிடத் துவங்கியது, பரபரப்பை கிளப்பியது.எதற்காக இந்த உருக்கமான வேண்டுகோள் என்பது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் கூறியதாவது:இந்திய தொல்லியல் துறையில், பல்வேறு

'பிரதமரே, கல்வெட்டு பிரிவை காப்பாற்றுங்கள்' என்ற பதாகையை கையில் பிடித்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, பல மூத்த வரலாற்று ஆய்வாளர்களும், கல்வெட்டியல் அறிஞர்களும், சமூக வலைதளங்களில் வெளியிடத் துவங்கியது, பரபரப்பை கிளப்பியது.latest tamil news


எதற்காக இந்த உருக்கமான வேண்டுகோள் என்பது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் கூறியதாவது:இந்திய தொல்லியல் துறையில், பல்வேறு பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு விளம்பரம் செய்திருந்தது. அதில், 'கல்வெட்டு ஆய்வாளர்' என்ற பிரிவே இல்லை. இதைப் பார்த்து விட்டுத்தான் மூத்த ஆய்வாளர்களும், அறிஞர்களும், 'கல்வெட்டு பிரிவை காப்பாற்றுங்கள்' என்ற பதாகையை ஏந்த வேண்டியிருந்தது.இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மைசூரு, நாக்பூர், லக்னோ, சென்னை ஆகிய இடங்களில் உள்ள இந்திய தொல்லியல் துறை அலுவலகங்களில் மொத்தம், 31 கல்வெட்டு ஆய்வாளர்கள் தான் உள்ளனர்.கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

இதுவரை இந்தியாவில், 60 ஆயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில், 20 ஆயிரம் கல்வெட்டுகள் தான் படியெடுக்கப்பட்டு, அதன் விபரங்கள் வாசிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான கல்வெட்டுகளை படியெடுத்து வாசிக்க வேண்டும்.தமிழகத்திலேயே, 32 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இதில் எல்லாவற்றிலும் இல்லையென்றாலும், ஆயிரக்கணக்கான கோவில்களில் கல்வெட்டுகள் உள்ளன. அவை காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் சிதைந்து போய் விடும். அதற்கு முன், அவற்றை எல்லாம் கண்டுபிடித்துப் படியெடுக்க வேண்டாமா?இதுவரை, மத்திய தொல்லியல் துறை, தான் கண்டுபிடித்து வாசித்த கல்வெட்டு விபரங்களை, 39 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது; இன்னும் பல தொகுதிகள் வெளிவர வேண்டியுள்ளது.

அப்படியானால், அதற்கு உரிய கல்வெட்டு ஆய்வாளர்கள் தேவை இல்லையா; அதுவும் கல்வெட்டு ஆய்வு என்பது, மிக முக்கியமான சமுதாய பணி. அது, வழிபாட்டு வரலாற்றை மட்டும் சொல்வதில்லை; சமுதாய வரலாற்றையும் சொல்கிறது.உதாரணமாக, இன்று நாம் சென்னைக்கு அருகே உள்ள ஒரு பகுதியை, திரிசூலம் என்று அழைக்கிறோம். அன்றைக்கு அதன் பெயர், திரிசுரம். திருமுக்கூடலில், ஆதுர சாலை இருந்துள்ளது. நாவிதர்களுக்கான பணிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.இதையெல்லாம் கல்வெட்டு வாயிலாகவே தெரிந்து கொண்டோம்.


latest tamil news


கீழடி ஆய்வு பற்றி பேசுகிறோம். அதில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டு ஆய்வாளர்களால் தான் வாசிக்க முடியும். பல்வேறு நாணயங்கள் கிடைத்துள்ளன; அதன் முக்கியத்துவத்தையும், காலத்தையும் கணிக்க ஆய்வாளர்கள் தேவை.இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான், கல்வெட்டு ஆய்வாளர் பிரிவை வலிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இவ்வாறு ஸ்ரீதரன் கூறினார்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
01-ஆக-202115:14:52 IST Report Abuse
oce மங்கோலியர் சிந்து சவெளிக்குள் நுழைந்தது கி.மு.1600.
Rate this:
Cancel
01-ஆக-202114:38:05 IST Report Abuse
வேதவல்லி கோயில் நில ஆவணங்கள், வரலாற்று பின்னணிபோன்வை அந்தந்த மானில தாய்மொழ, மற்றும் ஆங்ககலத்திலும் Metal லில் ரகசிய குறியிடுகளுடன் பதிவு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
01-ஆக-202113:58:23 IST Report Abuse
oce கிரேக்கர்கள் சிந்து வெளியில் குடியேறிய காலம் கி.மு.4500. ஆராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழின் ஆதி மூலம் கிரேக்க டெர்மிலய் டிரிமிலி டிரிமலய் என்ற கிரேக்க வார்த்தைகள். அவர்களுக்கு பின்னால் அங்கு குடியேறிய ஏஜின்கள் பேசிய அதே கிரேக்க மொழி டிரமிஸா டிரமிலா என வழங்கப்பட்டு குகை சாசன கல் வெட்டுகள் வாயிலாக டாமிழியாக மாறியிருக்கின்றன. இந்த குகைசாசன டாமிழி எழுத்து கல்வெட்டுகள் பின்னாளில் ஓலைச்சுவடி வாயிலாக வளர்ந்து தமிழாகியது. பெரும்பாலான தமிழக ஆலய கல்வெட்டுகளிலும் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பொருட்களிலும் பொறித்து வைத்துள்ள எழுத்துக்கள் தாமிழி வகை எழுத்துக்களாக இருக்கலாம். இந்த மொழி தெரிந்தவர்களால் தான் ஆலய கல்வெட்டுக்களை படிக்க இயலும். ப்ரி திராவிடர்கள் எனப்படும் கிரேக்கர்கள் நீக்ராய்ட்ஸ் என்ற திராவிடர்களுக்கு முந்தையவர்கள். கிரேக்கர்களை புரோட்டோ திராவிடர் என அழைக்கின்றனர்.புரோட்டோ திராவிடர்களில் ஒரு பகுதி சிந்து சமவெளிக்கு வந்த ஆட்டோசோன்சஸ் எனப்படும் மத்திய கிழக்கு தரைப்பகுதியினர். மற்றொரு பிரதான ஆசியப் பகுதியினர் அனடோலியா அர்மெனியா ஈரான் பெலுசிஸ்தான். இவர்களை ஏஜீன் என்றழைக்கின்றனர்.கி.பி1600 ல் இந்தியுவுக்குள் நுழைந்தமத்திய ஆசிய மங்கோலியர் ஆஸ்ட்ராலாயிட்ஸ்கள் எனப்பட்டனர். அவர்களுக்கு முன்பே சிந்து வெளிக்கு கி.மு3000 ல் வந்தவர்கள் பாலஸ்தீனியர்கள். அவர்களை புரோட்டோ ஆஸ்ட்ரலாயிட்ஸ் என்றழைக்கின்றனர்.இன்று நாம் பேசும் தமிழ் இவர்களால் தோன்றியது. ஆதாரம் வேத கால நாகரிகம். 1951 தென்னிந்திய வரலாறு 1955 ஆசிரியர் திரு கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (திராவிட கட்சிகளுக்கு திராவிடம் என்ற பெயரை கற்றுக் கொடுத்த பிராம்மணர். இப்போ இந்த வார்த்தையை வைத்து தான் ஊரை ஏமாற்றுகிறார்கள்.)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X