சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

பா.ஜ., தன் வழியை மாற்றணும்!

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சாரங்கா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசிய கட்சியான பா.ஜ., தமிழகத்தில் வளர முடியாததற்கு காரணம், இங்குள்ள பிரச்னைகளை சரியான திசையில் அணுகாததே.மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் பா.ஜ.,வின் வளர்ச்சி என்பது தமிழகத்தில் குறிப்பிடும்படி இல்லை.'காவிரி நதி நீர் பங்கீடு, நீட் தேர்வு, கொங்கு நாடு' போன்ற முக்கியமான விஷயங்களில், பா.ஜ.,வினர் ஒற்றுமையாக
 இது உங்கள் இடம்சாரங்கா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசிய கட்சியான பா.ஜ., தமிழகத்தில் வளர முடியாததற்கு காரணம், இங்குள்ள பிரச்னைகளை சரியான திசையில் அணுகாததே.மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் பா.ஜ.,வின் வளர்ச்சி என்பது தமிழகத்தில் குறிப்பிடும்படி இல்லை.

'காவிரி நதி நீர் பங்கீடு, நீட் தேர்வு, கொங்கு நாடு' போன்ற முக்கியமான விஷயங்களில், பா.ஜ.,வினர் ஒற்றுமையாக இல்லை.சட்டசபை தேர்தலில் நான்கு இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றதற்கு, 'வேல் யாத்திரை' போன்ற விஷயங்கள் முக்கிய காரணம்.தமிழக பா.ஜ.,வில் சரியான தலைமை உருவாகும் நிலையில், முருகனை மத்திய அமைச்சராக ஆக்கியது, கட்சி வளர்ச்சிக்கு சிறிதளவு பின்னடைவை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் பா.ஜ., வை பிராமண கட்சியாகவே பார்த்து வருகின்றனர். இப்போது அக்கட்சியில் முக்கிய பொறுப்புகளில் பிராமணர்கள் இல்லை என்றாலும், அத்தகைய தோற்றத்தை போக்க முடியவில்லை.திராவிட கட்சிகள், தமிழக மக்களையும் ஊழல் பங்காளிகளாக மாற்றிஉள்ளனர்; 60 சதவீத மக்களை 'குடி'காரர்களாக மாற்றி உள்ளனர். இந்நிலையில் இருந்து மக்களை மீட்க, பா.ஜ., பெரு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்பட்டாலும், திராவிட கட்சியினர் ஹிந்து மதத்தை வெளிப்படையாகவே பின்பற்றுகின்றனர்.எனவே எவ்வளவு தான் முயற்சி செய்து, தி.மு.க.,வை ஹிந்து விரோத கட்சியாக முன்னிலைப்படுத்தினாலும், அது தமிழகத்தில் எடுபடாது என்ற உண்மையை பா.ஜ., புரிந்து கொள்ள வேண்டும்.பா.ஜ.,வின் பெரும்பான்மையினர் நல கோஷம், வட மாநிலங்களில் பயன் அளித்தது; ஆனால் அது தமிழகத்தில் எடுபடுவதில்லை.

இன்றும் தமிழக மக்கள், பா.ஜ.,வை வடநாட்டு கட்சியாகவே பார்த்து வருகின்றனர். அதை உடைத்து, தமிழக நலன் காக்கும் கட்சி என்ற நிலைக்கு பா.ஜ., மாற வேண்டும்.எதிர்மறை பிரசாரத்தை தவிர்த்து, பா.ஜ.,வினர் மக்கள் நலப்பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரையில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். ஏனெனில் பா.ஜ.,வுக்கு எதிரான பிரசாரம், சமூக வலைதளங்கள் வழியாக தான் அதிகளவில் பரப்பப்படுகிறது.தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்க்க இப்படி எத்தனையோ வழி இருக்கு... அதில் பயணம் செய்யலாமே!

காங்கிரஸ் மாறவே இல்லை!

ரா.முக்கண்ணன், துடியலுார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம், 'பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கே அதிகமாக விற்கிறது' என, அபாண்டமான குற்றச்சாட்டு ஒன்றை பற்ற வைத்தார்.

மத்திய அரசு, கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மட்டுமே வழங்கி வருகிறது; தனியாருக்கு வழங்குவதில்லை.'தன்னை போல பிறரையும் நினை' என்பது போல, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் நடந்ததை நினைத்து, அவர் அப்படி கூறியிருக்கலாம்.மத்திய அரசிடம் இருந்து, ஒரு தடுப்பூசியின் விலையாக, 400 ரூபாய் கொடுத்து, மாநில அரசு வாங்குகிறது.

பஞ்சாப் மாநிலத்திற்கு 1.40 லட்சம் டோஸ் 'கோவாக்சின்' தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அந்த தடுப்பூசிகளை, 1,000 ரூபாய் என விலை பேசி, 20 தனியார் மருத்துவமனைகளுக்கு பஞ்சாப் அரசு விற்பனை செய்துள்ளது.பஞ்சாப் மாநில அரசோ, ஒரு பேராசை வியாபாரியை விட மோசமாக செயல்பட்டுள்ளது.மக்கள் உயிர் காக்க வழங்கப்பட்ட மருந்தை, 660 ரூபாய் லாபத்திற்கு விற்று, தன் மோசமான முகத்தை காட்டியுள்ளது, முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் காங்கிரஸ் அரசு.

மத்திய பா.ஜ., அரசு மீது விமர்சனத்தை நித்தமும் அள்ளி வீசும் ராகுலும், பா.சிதம்பரமும் பஞ்சாப் விஷயத்தில் மவுனமாக இருப்பது கண்டனத்திற்கு உரியது.இது மட்டுமா?கொரோனா 'கிட்' கொள்முதலிலும், பஞ்சாப் அரசு மோசடி செய்துள்ளது. இது போல காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் ஊழல் நடந்துள்ளது.மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது நிகழ்ந்த ஊழல்களை கண்டு, உலகமே வியந்ததே!

மத்தியில் இல்லாவிட்டால் என்ன... மாநிலத்தில் ஊழல் செய்வோம் என, காங்கிரஸ் நினைக்கிறது. அவ்வகையில், காங்கிரஸ் இன்னும் மாறவே இல்லை.இப்படிப்பட்ட காங்கிரசார் இருக்கையில் 'ஊழலை ஒழிப்போம்' என எந்த தைரியத்தில் ராகுல் சொல்கிறார் என்பது தான் புரியாத புதிராக இருக்கு!

மக்கள் பிரதிநிதிகளா நீங்கள்?

பி.என்.கபாலி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்ட் முடக்கம் என்பது வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது.பார்லி.,யில், இப்போது காங்கிரஸ் செய்யும் அழிச்சாட்டியத்தை தான், எதிர்க்கட்சியாக இருந்த போது பா.ஜ.,வும் செய்தது. அப்போது, 'பார்லி., சுமுகமாக நடக்க உதவுங்கள்' என கோரிக்கை விடுத்த காங்கிரசார் தான், இப்போது அதை முடக்குகின்றனர்.

இவர்களை கேட்பாரில்லை. எதையும் பேசி தீர்ப்பதற்கே பார்லிமென்ட் உள்ளது என்பதே தெரியாத இவர்களை தான், நாம் எம்.பி.,க்களாக தேர்ந்தெடுத்துள்ளோம்.பார்லி.,யோடு ஒப்பிட்டால் சட்டசபை பெருமளவிற்கு அமைதியாகவே நடக்கிறது. காரணம், சபாநாயகர் காட்டும் கண்டிப்பு. சட்டசபையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினரை துாக்கி வெளியே போட, அவர் தயங்குவதே இல்லை.

மக்கள் பிரதிநிதிகள் கூடுவது, மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பேசுவதற்காக மட்டுமே; அழிச்சாட்டியம் செய்வதற்கல்ல. சட்டசபையில் காட்டப்படும் கண்டிப்பு, பார்லி.,யில் இல்லை.கடமையை நிறைவேற்றாமல் குறுக்கீடு செய்யும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பார்லிமென்ட் சபாநாயகர் ஏன் தயங்குகிறார் என்பதே புரியவில்லை.

ஒழுங்கீனமும், கட்டுப்பாடின்மையும் ஓர் இயல்பாக மாறி வருவது ஆபத்தானது. 'பெகாசஸ்' போன் ஒட்டு கேட்பு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும், எதிர்க்கட்சிகள் பார்லி.,யில் எழுப்ப வேண்டும். பார்லி.,யை முடக்குவதால் என்ன பலன்? பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடுமா?நம் நாட்டில் கொரோனா தடுப்பு, பொருளாதார பாதிப்பு, விலைவாசி உயர்வு என எண்ணற்ற பிரச்னைகள் வரிசைக்கட்டி நிற்கும் போது, பார்லி.,யை முடக்குவது தேச விரோதம் என்பதில் மாற்று கருத்தில்லை.

எம்.ஜி.ஆர்., கொடுத்த இடம்!

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1977ல், எம்.ஜி.ஆர்., முதல்வர் ஆனதும், அவரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார் காஞ்சி சங்கராச்சாரியார். 'ஆறுபடை முருகனை தரிசிக்க, மக்கள் தமிழகம் முழுதும் செல்கின்றனர். ஒரே இடத்தில் ஆறுபடை முருகனையும் தரிசிக்க வேண்டும். கடற்கரை எதிரில் கோவில் அமைய வேண்டும்; அதற்கு நீங்கள் இடம் தர வேண்டும்' என்றார் சங்கராச்சாரியார்.

இதை ஏற்ற எம்.ஜி.ஆர்., சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகில் இடம் வழங்கினார்.ஒரு வார இதழுக்காக எம்.ஜி.ஆரை பேட்டி கண்ட நடிகை லதா, 'காஞ்சி பெரியவரை சமீபத்தில் தரிசித்து பேசினீர்களா?' என கேள்வி எழுப்பினார்.'ஒரு நல்ல துறவியை, பற்றில்லாத மனம் உடையவரை, பிறருக்காக வாழ்வதையே மாந்தர் கடமை என்ற தத்துவத்தின் ஒட்டுமொத்த உருவமாக காட்சி அளித்த ஒரு மகா பெரியவரை தரிசித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்' என, அவர் பதில் அளித்தார்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவில், தனியார் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ளது. உண்டியல் வசூல் கணக்கு மட்டும் அறநிலையத் துறை கண்காணிப்பில் உள்ளது.இங்கு சென்று வந்தால், தமிழகத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவில்களிலும் தரிசனம் செய்த உணர்வு ஏற்படுகிறது.பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோவிலில் ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்; எண்ணற்ற திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் இல்லை.

கோவில் குருக்களுக்கு மிகக் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.எனவே, அறக்கட்டளை வசம் உள்ள இந்த கோவிலை, ஹிந்து அறநிலையத் துறையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.எக்காரணத்தாலும் கோவில் நிர்வாகத்தில் தி.மு.க.,வினரை அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால், கோவிலில் அசைவ விருந்து போடுவர்; கட்சி கூட்டத்தை கோவிலில் நடத்துவர்.

அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலங்களை மீட்டெடுத்து வருகிறார் என்பது பாராட்டுக்கு உரியது.'அரசு பராமரிப்பில் உள்ள கோவில்களை, தனியார் வசம் தர முடியாது' என, அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ஆனால், தனியார் வசமுள்ள கோவில்களை அரசுடைமை ஆக்கலாமே!
'பின்' செய்யுங்கள்!

எஸ்.ஆர்.சாந்தி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: இன்றைய நவீன உலகில், 'தகவல் பரிமாற்றம்' என்பது மிக விரைவாக உள்ளது.தற்சமயம் பெரும்பாலான உயரதிகாரிகள், நிறுவன தலைவர்கள் தங்கள் கீழ் பணிபுரிவோருக்கு, 'வாட்ஸ் ஆப்' மூலமாகவே கட்டளைகளை அனுப்புகின்றனர்.

உறவு, நட்பு வட்டாரங்களில் நடக்கும் நல்லது, கெட்டது கூட வாட்ஸ் ஆப் குழு மூலமாக தான் தெரிவிக்கப்படுகிறது.இது போன்ற செய்திகளை சிலர் மட்டுமே உடனுக்குடன் அறிந்து கொள்கின்றனர். ஆனால், பலரோ தங்கள் வாட்ஸ் ஆப்பில் வரும் பல குப்பை செய்திகளோடு சேர்த்து, இதையும் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அதனால் மேலதிகாரி, உறவினரின் கோபத்திற்கு ஆளாவதுடன், தங்களது வேலையையும் விரைந்து செய்ய முடியாமல் தவிக்க நேரிடுகிறது.

இதை தவிர்க்க, ஒரு சுலபமான வழி இருக்கிறது.உங்களுக்கு முக்கியம் என கருதுகிற நபர்களின் எண்களை வாட்ஸ் ஆப்பில், 'பின்' செய்து விடுங்கள். அதிகபட்சம் மூன்று நபர்களை தான், 'பின்' செய்ய முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.இந்த நபர்கள் அனுப்பும் தகவல் எப்போதும் உங்கள் வாட்ஸ் ஆப்பில் முதல் மூன்று இடத்திலேயே இருக்கும். இதனால் தேவையில்லாத 1,000 தகவல்கள் வந்தாலும் முக்கியமானதை நீங்கள் தவறவிட மாட்டீர்கள்.பிறகென்ன... நீங்களும் உங்கள் அலுவலகத்திலும், குடும்பத்திலும், 'நல்ல பிள்ளை' என்ற பெயரை தட்டிச் செல்லலாம்.

சபையை முடக்க உரிமையில்லை!
கு.அருணாச்சலமூர்த்தி, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய நாள் முதல், இரு சபைகளையும் நடத்த விடாமல் கூச்சல், குழப்பம் செய்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடக்கி வருவது வருத்தம் அளிக்கிறது.

மக்கள் பிரச்னைகளை எடுத்து கூறி தங்களது தொகுதிக்கு தேவையானவற்றை பெற்று தர வேண்டிய உறுப்பினர்கள், குழாயடி சண்டை போல செயல்படுவது, சிறுபிள்ளை தனமாக உள்ளது.பார்லிமென்டில் 'பெகாசஸ்' ஒட்டு கேட்பு பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால், நாட்டிற்கு பயனுள்ள எந்த விவாதத்திலும் ஈடுபடாமல், மக்களின் வரிப்பணத்தை வீண் செய்துள்ளனர்,

நாம் தேர்ந்தெடுத்த எம்.பி.,க்கள்.பார்லிமென்ட் செயல்பட ஒரு நிமிடத்திற்கு 3 லட்சம் ரூபாய் வரையிலும், ஒரு மணி நேரத்திற்கு 1.80 கோடி ரூபாயும் செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.இந்த மழைக்கால கூட்டத்தொடர் முடக்கப்பட்டதால், 50 கோடி ரூபாய்க்கும் மேல் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது. இந்த தொகையை, எம்.பி.,க்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்.பார்லிமென்டில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய பல வழிமுறைகள் உள்ளன.

அப்படி இருக்கையில், தொடர்ந்து சபையை முடக்கினால், அவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பும், கோபமும் தான் வரும்.மத்திய அரசு தவறு செய்திருந்தால், சபையில் கேள்வி எழுப்பி, உரிய பதிலை பெறுவதற்கான அத்தனை உரிமையும் எம்.பி.,க்களுக்கு உள்ளது.இந்த பெகாசஸ் விவகாரம் உலகளவிலான சர்ச்சையாகும்.

அப்படி இருக்கையில், மத்திய அரசு மீது மட்டும் குற்றஞ்சாட்டுவது சரியல்ல.எதிர்க்கட்சிகளின் செயலை பார்க்கையில், பார்லிமென்ட் நடக்கவே கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர் போல தெரிகிறது. இதன் பின்னணியில், வெளிநாட்டு சதி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.நாட்டின் மாண்புக்கும், ஜனநாயகத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில், பார்லிமென்டை முடக்குவதை எதிர்க்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Inbaraj - Trichy,இந்தியா
01-ஆக-202115:34:03 IST Report Abuse
Inbaraj தமிழக முதல்வருக்கு திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் இன்பராஜ் கடிதம். தாங்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்று 100 நாட்கள் கடக்க உள்ளது. அரசின் அணுகுமுறைகள் குறிப்பாக கொரோனா காலத்தில் நீங்கள் எடுத்த தீவிர நடவடிக்கைகள், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி செய்த அதிகாரிகளை அரசு துறைகளில் நியமனம் செய்தது, யார் எந்த தவறு செய்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் பாராட்டும் வண்ணம் உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது அனைத்து மக்களின் விருப்பம். இது உயர்ந்து வரும் விலைவாசியை குறைக்க வழிவகை செய்யும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஆக-202106:35:26 IST Report Abuse
D.Ambujavalli கூச்சல், மைக் உடைப்பு, ரவுடித்தனம் செய்யும் காலமாகவே நாடாளுமன்றத்தை ஆக்கி, மக்களின் வரிப்பணத்தை வாரி விடுபவர்கள் எல்லா ஆட்சியிலும் மக்களின் துரோகிகளாகவே எண்ணப்பட்டு தண்டனை பெற வேண்டு. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இதை செய்ய எந்த சபா நாயகரும் முன் வருவதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X