சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழக சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்: அகில இந்திய மருத்துவப்படிப்புக்கான இடங்களில், 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்துள்ளது. இது, தமிழர்களின் இமாலய வெற்றி. தி.மு.க., தொடர்ந்த வழக்கில் தான், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உரிமையை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. சமூகநீதி போராட்டத்தில் இந்தியாவுக்கே நீதி கிடைக்க வழிவகுத்த முதல்வர், சென்னை
 'டவுட்' தனபாலு

தமிழக சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்: அகில இந்திய மருத்துவப்படிப்புக்கான இடங்களில், 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்துள்ளது. இது, தமிழர்களின் இமாலய வெற்றி. தி.மு.க., தொடர்ந்த வழக்கில் தான், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உரிமையை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. சமூகநீதி போராட்டத்தில் இந்தியாவுக்கே நீதி கிடைக்க வழிவகுத்த முதல்வர், சென்னை உயர் நீதிமன்றம், வாதாடிய வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி.

'டவுட்' தனபாலு: சிறுபான்மையினர் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து, காங்கிரஸ்காரர் என்பதை மறந்து, தி.மு.க., தலைவர் போல சகட்டுமேனிக்கு தி.மு.க.,வை புகழ்கிறீர்களே... புகழ்ச்சியும் ஒரு அளவுக்கு மேல் போனால், அந்த வார்த்தைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும். இதை நீங்களும் அறிந்திருப்பீர்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை.lll

தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் ஏராளமான பா.ஜ.,வினர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த மம்தா பானர்ஜி டில்லிக்கு வந்து தலைவர்களை சந்தித்த பின், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஒரு பத்திரிகையாளர்கள் கூட அவரிடம், மேற்கு வங்க தேர்தல் வன்முறை குறித்து தைரியமாக கேள்வி எழுப்பவில்லை.

'டவுட்' தனபாலு: பத்திரிகையாளர்களை சாடும் நீங்கள், மேற்கு வங்கத்தில் திரிணமுல் குண்டர்களால் கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு, பா.ஜ., தலைவர்கள் என்ன செய்து விட்டனர் அல்லது பா.ஜ., தான் என்ன செய்து விட்டது... அந்த விவகாரத்தை பெரிய அளவில் நாடு முழுதும் பிரபலப்படுத்தாமல், பா.ஜ., விட்டு விட்டதே அது ஏன் என்ற, 'டவுட்' எழுகிறது!

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கொரோனா முதல் அலையின் போது, கேரளா - தமிழகம் எல்லைகளை மூடுவதில் ஏற்பட்ட தாமதம் போல இப்போதும் ஆகி விடக் கூடாது. அங்கு கொரோனா தொற்றும், ஸிகா நோய் தாக்கமும் அதிகரித்துள்ளது. எனவே, உடனடியாக அந்த எல்லையை மூடி, சோதனையை தீவிரமாக்கி தமிழகத்திற்குள் நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: எல்லைகளை மூடி, சோதனைகளை தீவிரமாக்கினால், பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விடுமா... நோய் பாதிப்பு உள்ளவர்கள், வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பரே தவிர, அவர்கள் இரு மாநிலங்களுக்கு இடையே சுற்றுலா செல்ல மாட்டார்கள். எனினும், முன்கூட்டியே தமிழக அரசை உஷார்படுத்துகிறீர்கள் என்பதில் மட்டும், 'டவுட்'டே இல்லை!

தமிழக காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்: குமரி மாவட்டத்தில், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர், தன் அலுவலக அறை முகப்பில், 'ஹிந்து' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அறநிலையத்துறை என எழுதியிருந்தார். இதை அறிந்த ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'ஹிந்து அறநிலையத்துறை' என எழுத உத்தரவிட்டுள்ளார். நம்பிக்கை உள்ளவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படும் அமைச்சர் சேகர் பாபுவுக்கு வாழ்த்துகள்.

'டவுட்' தனபாலு: தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சேகர்பாபு, ஹிந்து அறநிலையத்துறையின் முக்கிய செயல்களான கோவில்களை பாதுகாப்பது, நிர்வகிப்பது, ஆக்கிரமிப்பில் இருந்து காப்பது போன்ற பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். பகுத்தறிவு பாதையில் வந்த முதல்வர் ஸ்டாலின், கோவில்களை காப்பாற்றத் தான், இவரை நியமித்துள்ளாரோ; இதன் மூலம் பகுத்தறிவு பாதையை சரிவர பயன்படுத்துகிறாரோ என்ற 'டவுட்' கட்சியினருக்கு வந்துள்ளது.

பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி: சிறுபான்மையினர் விஷயத்தில் மத நம்பிக்கை எனவும், ஹிந்துக்கள் விவகாரத்தில் பகுத்தறிவு எனவும் பேசி, மக்களை ஏமாற்றும் திராவிடர்கள் இருக்கும் வரை, தமிழகம் கொள்ளையடிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கும்.

'டவுட்' தனபாலு: திராவிட கட்சிகள் கொள்ளையடிக்கின்றன என்கிறீர்கள். அதற்கு சிம்ம சொப்பனமாக, பா.ஜ., மற்றும் சங் பரிவார் அமைப்புகள் உள்ளன என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், பா.ஜ.,வில் இருக்கும் நீங்களே, சகட்டுமேனிக்கு பா.ஜ., தலைவர்களையும், பா.ஜ., தேசிய செயல்பாட்டையும் விமர்சிக்கிறீர்களே, இதுவும் ஒரு வகை ஏமாற்று தானோ என்ற 'டவுட்' வருகிறதே!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: டோக்கியோ ஒலிம்பிக்கில், 'ஸ்டிரீட் ஸ்கேட் போர்டிங்' போட்டிகளில், தங்கம் வென்ற ஜப்பானின் 13 வயது குழந்தை மோமிஜி நிஷியா, வெள்ளி வென்ற பிரேசிலின் 12 வயது குழந்தை ரைசா லியால், ஜப்பானின் 16 வயது வெண்கல மங்கை நகாயாமா ஆகியோருக்கு வாழ்த்துகள்!

'டவுட்' தனபாலு: ஜப்பான், பிரேசில் குழந்தைகளை கூட மனதாரவும், வாயாரவும் வாழ்த்துகிறீர்கள். நம் இந்தியர்களும் எப்படியாவது தங்கம் வென்று பதக்கங்களை குவிப்பர் என்ற உங்களின் விருப்பம் அதில் தென்படுகிறது. எனினும், நம் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக சூழல், உலக அளவிலான போட்டிகளில் நம் மக்களை ஜொலிக்க விடாமல் செய்கிறதோ என்ற 'டவுட்' பலருக்கும் உண்டு!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Narayanan - Hyderabad,இந்தியா
01-ஆக-202121:15:43 IST Report Abuse
Arul Narayanan 27% ஒதுக்கீடு அமலுக்கு வந்து 31 வருடங்கள் கழித்து என்ன வெற்றி? அன்றைக்கே இந்த திமுக ஆட்சியில்தானே இருந்தது. 31 வருடங்களில் எத்தனை தமிழ் மாணவர்கள் வாய்ப்புகளை இழந்தார்களோ?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
01-ஆக-202119:10:12 IST Report Abuse
M  Ramachandran நல்ல பக்க வாத்யம். .இவர்களுக்கு நல்ல படி யோசனை தோனாதோ. மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்திற்கு கூச்ச நாச்சமில்லாமல் மாநில அரசு திட்டம் மென்று கூற. ஜால்றா அடிப்பதிலும் நம்பும் படி அடித்தால் அவர் புகுலும் தலைவருக்கு கூச்சம் ( புள்ள அரிப்பு) ஏற்படுமபடி செய்ய இப்படி அடித்து விடுகிறார்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஆக-202106:09:27 IST Report Abuse
D.Ambujavalli அரசியலில் விளையாட்டும், விளையாட்டில் அரசியலும் புகுந்து, வேண்டியவர் வேண்டாதவர்,நிதியில் ‘ஒதுக்குதல்’ எல்லாம் முக்கியமாகிவிட்ட நிலையில் பதக்கக் கனவு காணக்கூட நம்மால் முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X