இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்சி.பி.ஐ., வழக்கு பதிவுபுதுடில்லி: டில்லி திஹார் சிறையில் விசாரணை கைதி ஸ்ரீகாந்த் ராமசாமி, 2002 மே 14ல் மரணம் அடைந்தார். சிறையில் இருந்த நால்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திட்டமிட்டு மகன் கொலை செய்யப்பட்டதாக, அவரது தாய் மல்லிகா டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஸ்ரீகாந்த் மரணம் குறித்து
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்


சி.பி.ஐ., வழக்கு பதிவு

புதுடில்லி: டில்லி திஹார் சிறையில் விசாரணை கைதி ஸ்ரீகாந்த் ராமசாமி, 2002 மே 14ல் மரணம் அடைந்தார். சிறையில் இருந்த நால்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திட்டமிட்டு மகன் கொலை செய்யப்பட்டதாக, அவரது தாய் மல்லிகா டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஸ்ரீகாந்த் மரணம் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.

.22 கைதிகள் காயம்

பிந்த்: மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்ட சிறை, பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. நேற்று அதிகாலை சிறையின் தடுப்புச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 22 கைதிகள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news


'ஆன்லைன்' விளையாட்டால் பலி

சத்தர்பூர்: மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன், 'ஆன்லைன்' விளையாட்டில் தன் தாயின் வங்கி கணக்கில் இருந்த, 40 ஆயிரத்தை இழந்தான். தாய் திட்டியதால், வீட்டில் யாரும் இல்லாதபோது மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

ஊடுருவ முயன்றோர் சுட்டுக்கொலை

சண்டிகர்: பஞ்சாபின் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இப்பகுதியின் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற, பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரை, நம் வீரர்கள் சுட்டுக்கொன்றனர்


தமிழக நிகழ்வுகள்

நூல் மில்லில் தீ விபத்து

திருப்பூர்;காங்கயம், படியூர், ஒட்டபாளையம் செல்லும் ரோட்டில் ரஷீத் அலி, 62; கழிவு பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் மில் நடத்தி வருகிறார்.நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் திடீர் என, பஞ்சு அரைக்கும் பகுதியில் இருந்து தீ பிடித்து எரிந்துள்ளது. காங்கயம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீ விபத்தில், நுால், இயந்திரம், கட்டடம் என, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி - வேன் மோதல்: வாலிபர் பரிதாப பலி

திருப்பூர்:விழுப்புரம் மாவட்டம், சித்திரப்பட்டியை சேர்ந்தவர் பூவரசன், 21. திருப்பூர் ஊத்துக்குளி ரோடு குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் வேலை செய்த இடத்தில், உரிமையாளருடன், பூவரசனுக்கு தகராறு ஏற்பட்டது. வேலையை விட்டு நின்ற அவர்,எஸ்.பெரியபாளையம் அருகே வேலை செய்து வரும் நண்பர் மகேந்திரனை பார்க்க சென்றார். சிறிது நேரம், இருவரும் பேசினர்.இதையடுத்து, மகேந்திரன் வீட்டுக்கு கிளம்பி சென்றார். மதுபோதையில் இருந்த பூவரசன், டிராவல்ஸ் நிறுவனத்தில் நின்றிருந்த சரக்கு வேனை திருடி கொண்டு திருப்பூர் நோக்கி சென்றார்.அப்போது, எஸ்.பெரியபாளையத்தில் எதிரேவந்த லாரி மீது நேருக்கு நேர் மோதினார்.சம்பவ இடத்திலே பூவரசன் பரிதாபமாகஇறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news


கரூர் மக்களுக்கு இரவு நேரத்தில் பல்பு காட்டிய பாம்பு சுமார் இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் பரபரப்பு

கரூர் நகரில், சுங்ககேட் அடுத்துள்ள தெரசா கார்னர் பகுதியில், இரவு நேரத்தில் தெரசா கார்னர் பகுதியில், சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் பேரிகார்டு பகுதியில் 4 1/2 அடி நீளமுள்ள விரியன் வகை பாம்பு, எதையோ உண்டுவிட்டு அசைய முடியாமல் ஒரே இடத்தில் படுத்து இருந்துள்ளது. இந்நிலையில் இரு சக்கர வாகனங்களில் கரூரிலிருந்து காந்தி கிராமம் மற்றும் சென்ற வாகன ஓட்டிகள், வாகனத்தின் முகப்பு விளக்குகளை டிம் அண்ட் ப்ரைட் செய்து இயக்கிய போது, பாம்பில் பட்டு மிளிர்ந்துள்ளது. இந்நிலையில் அங்கு உள்ள இளைஞர்கள் அருகில் சென்று பார்த்தபோது அசைய முடியாமல் அப்படியே ஒரே இடத்தில் இருந்து உள்ளதை பார்த்து கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் என நிலையில் கரூர் தீயணைப்பு வீரர்கள் இந்த பாம்பினை பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் கரூர் நகரின் மையப்பகுதியான தெரசா கார்னரில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நீடித்தது

ஓட்டேரியில் 10 ரவுடிகள் கைது

ஓட்டேரி: சென்னை ஓட்டேரி பகுதியில், ஒரே நாளில் ரவுடிகள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை பிடித்து சிறையில் அடைக்க, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாநகரின் பல பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் ரவுடிகளை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், ஓட்டேரி போலீசார் தங்கள் காவல் எல்லையில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பெயர் பட்டியலை தயார் செய்தனர். அவர்களில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஓட்டேரி, கிருஷ்ணதாஸ் பிரதான சாலையைச் சேர்ந்த மகேஷ், 28, உட்பட ரவுடிகள் 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மாநகரை அமைதியாக வைத்திருக்க, ரவுடிகளை சிறையில் அடைக்கும் நடவடிக்கை தொடரும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

மனைவி கோபித்ததால் தற்கொலை

சிவகாசி: அறிஞர் அண்ணாதுரை காலனியை சேர்ந்தவர் இசக்கி ராஜா 26. குடும்பத் தகராறில் மனைவி கோபித்து கொண்டு சென்றுவிட்டார். மனமுடைந்த இசக்கி ராஜா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

4 பேர் குண்டாசில் கைது

ராமநாதபுரம், :முதுகுளத்துார் தாலுகா மேலக்கன்னிச் சேரி முனியசாமி 21, மணிகண்டன் 21, நாகேந்திரன் 26, வழிவிட்டான்42, ஆகியோர் மீது அடி தடி வழக்கு, பொதுஅமைதிக்கு பங்கம்விளைவித்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது. போலீசார் 4 பேரையும்குண்டாஸ் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மின்கசிவு காரணமாக 4 வீடுகள் எரிந்து சாம்பல்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த மேல்குமாரங்கலம் கிராமத்தில் மின்கசிவு காரணமாக மூன்று கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது.

பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மனோகர்,47; இவரது கூரை வீட்டில் நேற்று மதியம் 1:30 மணியளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து அருகிலுள்ள அம்பிகா,55; , ஏழுமலை, 50; வீட்டிற்கும் பரவியது. பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் மாசிலாமணி தலைமையில் வீரர்கள் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீவிபத்தில் வீடுகளில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
01-ஆக-202102:33:22 IST Report Abuse
BASKAR TETCHANA தினமலர் ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். தினமும் பல அறிய தகவல்களை தருகிறீர்கள். அந்த வரிசையில் தமழகத்தில் நடக்கும் கொலை கொள்ளை திருட்டு கற்பழிப்பு கோவில்களில் திருடுவது இன்னும் பல குற்ற நிகட்சிகள் எது எங்கு தமிழகத்தில் நடந்தாலும் பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். அதுவும் இந்த ஆட்சியில் நடப்பவைகளை மட்டும். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X