இந்தியாவின் தலைமையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில்

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
நியூயார்க்-ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை இந்த மாதம் இந்தியா வகிக்க உள்ளது. ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் திருமூர்த்தி தலைமையில் நாளை முதல் கூட்டம் நடக்கஉள்ளது.ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் திருமூர்த்தி வெளியிட்ட 'வீடியோ' பதிவில் கூறியிருப்பதாவது:ஆகஸ்ட் மாதம் இந்தி யாவின் தலைமையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இயங்கும். இதைத் தொடர்ந்து, 2022 டிச.,ல்

நியூயார்க்-ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை இந்த மாதம் இந்தியா வகிக்க உள்ளது. ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் திருமூர்த்தி தலைமையில் நாளை முதல் கூட்டம் நடக்கஉள்ளது.latest tamil newsஐ.நா.,வுக்கான இந்திய துாதர் திருமூர்த்தி வெளியிட்ட 'வீடியோ' பதிவில் கூறியிருப்பதாவது:ஆகஸ்ட் மாதம் இந்தி யாவின் தலைமையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இயங்கும். இதைத் தொடர்ந்து, 2022 டிச.,ல் மீண்டும் இப்பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்படும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடல்சார் பாதுகாப்பு, அமைதி பராமரிப்பு, பயங்கரவாத தடுப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தாண்டு துவக்கத்தில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இந்தியா இணைந்தது.


latest tamil newsஇதையடுத்து கடந்த ஏழு மாதங்களில் பல்வேறு பிரச்னைகளில் இந்தியாவின் கொள்கைகள் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளன. பொறுப்புகளை தோளில் சுமக்க இந்தியா எப்போதும் அஞ்சியதில்லை. ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கும், முன்னுரிமை பிரச்னைகளுக்கும் இந்தியா எப்போதும் குரல் கொடுத்து வருகிறது.நாட்டின் 75வது சுதந்திர தின விழாவில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இரு ஆண்டுகள், இரு முறை தலைமை பொறுப்பு ஆகியவற்றை வகிக்க இருப்பது பெருமையாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
01-ஆக-202113:27:27 IST Report Abuse
r.sundaram பயங்கரவாதிகளை உலக நாடுகளுக்கு விநியோகிக்கும் பக்கத்து நாட்டை என்ன செய்கிறது இந்தியா? பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவின் தலைமை இருக்கும் நேரத்தில் ஏதாவது செய்ய முடியுமா?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-ஆக-202109:43:25 IST Report Abuse
sankaseshan Subu ,the reason for this is your beloved nehru . When security council permanent membership was given with veto power nehru asked UNO to give it to China
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
01-ஆக-202108:40:43 IST Report Abuse
duruvasar வடநாட்டு நேருவின் தொலைநோக்குப் பார்வையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அதே சமயம் அவர் விட்டு சென்ற பணிகளை தொடரும் தென்னாட்டு நேருவை பாராட்டியே ஆகவேண்டும். நேரு வாழ்க.
Rate this:
01-ஆக-202118:22:43 IST Report Abuse
thulasiraman hPLEASE DON'T REPEAT THE SAME COMMENT...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X