பொது செய்தி

இந்தியா

நிதி ஆலோசகர் அனைவருக்கும் அவசியம்!

Added : ஆக 01, 2021
Share
Advertisement
முதலீட்டாளர்களுக்கு நிதி ஆலோசகர் அவசியம். நிதி ஆலோசகர் என்பவர் யார்; அவரின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கூறும், 'மை அசட்ஸ் கன்சாலிடேஷன்' நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் பார்த்தசாரதி: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. அவற்றை பூர்த்தி செய்ய, வரவு - செலவு விவகாரங்களை சரியாக கையாள வேண்டியது அவசியம். எல்லாராலும் நிதி விவகாரங்களை எளிதில் சரி வர கையாள

முதலீட்டாளர்களுக்கு நிதி ஆலோசகர் அவசியம். நிதி ஆலோசகர் என்பவர் யார்; அவரின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கூறும், 'மை அசட்ஸ் கன்சாலிடேஷன்' நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் பார்த்தசாரதி: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. அவற்றை பூர்த்தி செய்ய, வரவு - செலவு விவகாரங்களை சரியாக கையாள வேண்டியது அவசியம்.

எல்லாராலும் நிதி விவகாரங்களை எளிதில் சரி வர கையாள முடியாது. அத்தகைய நேரத்தில், உறுதுணையாக இருப்பவர் தான் நிதி ஆலோசகர். நம்மிடம் உள்ள நிதியை எப்படி கையாளுவது, எப்படி திட்டமிட்டு முதலீடு செய்வது என எளிமையாக எடுத்துச் சொல்லும் வேலையை செய்பவர்கள் இவர்கள்.குறிப்பிட்ட நிதி இலக்கை அடைய எந்தெந்த முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது முதற்கொண்டு, வரி விலக்குக்கு அறிவுரை கூறுவது வரை நம் ஒவ்வொரு நிதி செயல்பாட்டையும் கண்காணித்து அறிவுரை கூறுபவர் இவர். இவர்கள், இதற்கென படித்திருக்க வேண்டியது அவசியம். மூலதனச் சந்தைக்கான தேசிய மேலாண்மை மையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றவரே, நிதி ஆலோசகராக பணியாற்ற தகுதி உடையவர். சிலர், இந்த தேர்வு எழுதாமல், அனுபவ அறிவால் நிதி ஆலோசகராக பணியாற்றலாம். அத்தகையோர் தங்கள் அடையாள குறிப்புகளில், நிதி ஆலோசகர் என குறிப்பிட முடியாது.

நிதி அறிவுரையாளர் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தங்களின் லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டு, இணையதள பக்கம் போன்றவற்றில், தங்களை நிதி ஆலோசகர் என போட்டுக் கொள்ளலாம்.இத்தகைய நிதி ஆலோசகர்கள் தான், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பெற்று வேலை செய்யும் தகுதியை பெறுகின்றனர். அதுபோல, நிதி ஆலோசகர்களில் கட்டணம் வாங்குபவர், வாங்காதவர் என இரண்டு வகையினர் உள்ளனர். இருவருமே நேர்மையானவர்களாக இருக்கலாம். எனினும், கட்டணம் வாங்குபவராக இருந்தால், அவர் எந்த நிறுவனத்தையும் சாராமல், நடுநிலையுடன் இருக்க வாய்ப்பு உள்ளது.கட்டணம் வாங்காதவர் என்றால், அவர் ஒரு நிறுவனத்திற்காக பணியாற்றுகிறார் என்பதை முடிவு செய்து விடலாம்.நிதி ஆலோசகராக இருப்பவர், மிகுந்த நேர்மையும், நாணயமும் கொண்டவராக இருப்பது மிகவும் அவசியம்.

எனவே, நம் நிதி ஆலோசகராக ஒருவரை நியமிக்கிறோம் என்றால், அவரின் பின்புலம் என்ன, எத்தகைய நேரத்திலும் நேர்மை தவறாதவரா என்பதை சரிபார்த்து நியமிக்க வேண்டும்.அதுபோல, எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில், விதவிதமான முதலீட்டு திட்டங்களை அறிந்தவராக அவர் இருப்பது அவசியம். கமிஷன் பெறுவதற்காக, தவறான முதலீட்டு திட்டங்களில் கைகாட்டுபவர்களும் உள்ளனர். எனவே, நிதி ஆலோசகர் நியமனத்தில் கவனம் அவசியம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X