சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'டங்குவார் அறுந்து விடும்!'

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள தாதிரெட்டிபள்ளியில், பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா சமீபத்தில் நடந்தது.இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'அதிகாரிகள் லஞ்சம் எதிர்பார்க்கின்றனர்... முறைகேடுகளில் ஈடுபடுவோரின் 'பட்டையை' உரித்து விடுவேன்... குவாரி மண்ணை திருடுபவனின் 'டங்குவார்' அறுந்து விடும்...' என்றார்.அங்கிருந்த முதியவர் ஒருவர், 'இது
பக்கவாத்தியம்


வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள தாதிரெட்டிபள்ளியில், பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா சமீபத்தில் நடந்தது.இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'அதிகாரிகள் லஞ்சம் எதிர்பார்க்கின்றனர்... முறைகேடுகளில் ஈடுபடுவோரின் 'பட்டையை' உரித்து விடுவேன்... குவாரி மண்ணை திருடுபவனின் 'டங்குவார்' அறுந்து விடும்...' என்றார்.

அங்கிருந்த முதியவர் ஒருவர், 'இது அமைச்சர் பேசுற மாதிரி இல்லையே... ஏதோ பேட்டை ரவுடி மாதிரி இருக்கு...' என்றார். அருகிலிருந்த இளைஞர், 'கொஞ்சம் சத்தமா சொல்லுங்க பார்ப்போம்...' என்றதும், 'எதுக்கு, நான் இருக்குறது உனக்கு பிடிக்கலையா...' என்றபடியே இடத்தை காலி செய்தார்.


அந்த காலத்தை மறக்க முடியுமா?



மதுரை இளமனுாரில் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் துவக்கி வைத்தார்.பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 'தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்துறாங்களே...' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

கோபமான அமைச்சர், 'அ.தி.மு.க., 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தே... மதுரையில் தமிழன்னைக்கு சிலை வைப்போம், மதுரையை சிங்கப்பூராக்குவோம், மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவோம் என்றனர். எங்கடா மோனோ ரயில் ஓடுது... எங்கடா தமிழன்னைக்கு சிலை வைத்துள்ளனர்...' என்றார்.அங்கிருந்த நிருபர்கள் மிரண்டனர். மூத்த நிருபர் ஒருவர், 'முந்தைய தி.மு.க., ஆட்சியில மதுரை எப்படி இருந்ததுன்னு மறக்க முடியுமா... அமைச்சர் அதை தான் தன் பேச்சில் நினைவுப்படுத்துறார்... கவனமாக இருக்கணும்...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர். எல்லாம் ஏடாகூடமாக நடக்குதே!பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன், ம.தி.மு.க., சார்பில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.காஸ் சிலிண்டரை பாடையில் வைத்து, ஊர்வலமாக எடுத்து வந்தனர். மகளிரணியினர் ஒப்பாரி வைத்து அழுதனர். அதை 'மைக்' மூலம் ஒலிபரப்பினர்.இதனால் அவ்வழியாக சென்ற பெண்கள் சிலர், யாரோ இறந்து விட்டார் என நினைத்து, பாடையை எட்டிப் பார்த்தனர்.அங்கிருந்த கட்சிக்காரர் ஒருவர், 'போங்கம்மா... காஸ் விலைய கண்டிச்சு போராட்டம் பண்றோம்' என விளக்கினார்.அங்கிருந்த நிருபர் ஒருவர், 'நல்லா நடிக்கிறவங்க எல்லாம் கட்சியில இருக்குறாங்க... நடிக்கவே தெரியாதவங்க எல்லாம் சினிமாவுல இருக்காங்க... என்னய்யா நடக்குது தமிழகத்துல...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஆக-202106:19:59 IST Report Abuse
D.Ambujavalli நடக்கும் வாய்ப்பு தீர்ந்ததும் தான் அரசியலில் நடிக்க வந்து விடுகிறார்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X