மும்பை-இன்று முதல் வங்கித் துறையில், 24 மணி நேர தேசிய தானியங்கி பணப் பட்டுவாடா மைய சேவை வசதி அறிமுகமாகிறது. அதனால், இனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும், ஊழியர்கள் ஊதியம் பெறுவது, ஓய்வூதியம் பெறும் நடைமுறைகள் சாத்தியமாகி உள்ளன.

பணப் பட்டுவாடாரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ஜூனில் வெளியிட்ட பணக் கொள்கை அறிக்கையில் 'ஆக., 1 முதல், 'நாச்' எனப்படும் தேசிய தானியங்கி பணப்பட்டுவாடா மையத்தின் சேவைகள், 24 மணி நேரமும் கிடைக்கும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று முதல் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் பணம் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.
இதற்காக நாச் விதிகளில் ரிசர்வ் வங்கி திருத்தம் செய்துள்ளது. இதுவரை திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே நாச் சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. இனி, இந்த சேவை வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரம் கிடைக்கும். முற்றுப்புள்ளிஇதுவரை ஞாயிறு அல்லது அரசுவிடுமுறை தினங்களில் ஊதியம் அல்லது ஓய்வூதியம் பெற முடியாமல், அலுவலகநாள் வரும் வரை காத்திருக்கும் நிலை இருந்தது.

இந்த பிரச்னைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.இனி விடுமுறை நாட்களிலும் ஊதியம்,ஓய்வூதியம் போன்றவை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். விடுமுறை காரணமாக மாதத் தவணை செலுத்துவது உள்ளிட்ட முக்கிய பரிவர்த்தனைகளையும் தடையின்றி மேற்கொள்ள வழிபிறந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE