பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 01, 2021
Share
Advertisement
ஆகஸ்ட் 1, 1876செங்கல்பட்டு மாவட்டம் கொளத்துாரில், 1876 ஆக., 1ம் தேதி பிறந்தவர், வரதாச்சாரியார். தன் இரு சகோதரர்களுடன் சேர்ந்து கர்நாடக இசை பயின்றார். சென்னை வந்த மூவரும் காலடிப்பேட்டையில் குடியேறினர். அதனால், 'காலடிப்பேட்டை சகோதரர்கள்' என அழைக்கப்பட்டனர்.வறுமை காரணமாக, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 'சர்வே' துறையில் பணிபுரிந்தார். நேரம் கிடைக்கும் போது கோவில், திருமண
 இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 1, 1876

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்துாரில், 1876 ஆக., 1ம் தேதி பிறந்தவர், வரதாச்சாரியார். தன் இரு சகோதரர்களுடன் சேர்ந்து கர்நாடக இசை பயின்றார். சென்னை வந்த மூவரும் காலடிப்பேட்டையில் குடியேறினர். அதனால், 'காலடிப்பேட்டை சகோதரர்கள்' என அழைக்கப்பட்டனர்.

வறுமை காரணமாக, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 'சர்வே' துறையில் பணிபுரிந்தார். நேரம் கிடைக்கும் போது கோவில், திருமண விழாக்களில் கச்சேரி செய்வார்.இவரது பாடலை கேட்ட மைசூர் மகாராஜா, அரண்மனை ஆஸ்தான பாடகராக நியமித்தார். அவர் தான், 'டைகர்' என்ற பட்டத்தை வரதாச்சாரியாருக்கு சூட்டினார்.

மைசூர் அரண்மனையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பின், சென்னை மியூசிக் அகாடமியின் ஆசிரியர்களுக்கான இசை கல்லுாரியில் முதல்வராக பணியாற்றினார்.சென்னை பல்கலையில் இசைப் பிரிவு தலைவராக பணியாற்றியபோது, இவரது ஆலோசனையின்படி டிப்ளமா இசைப் படிப்பு துவங்கப்பட்டது. அண்ணாமலை பல்கலை மற்றும் சென்னை அடையாறு கலாஷேத்ராவில் முதல்வராக பணியாற்றினார். 1950 ஜன., 31ம் தேதி தன் 73வது வயதில் காற்றில் கலந்தார்.'டைகர்' வரதாச்சாரியார் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X