அண்ணாமலை போராட்ட அறிவிப்பு: 'கவலையில்லை' என்கிறார் பசவராஜ் பொம்மை

Added : ஆக 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
''மேகதாது அணை கண்டிப்பாக கட்டியே தீருவோம். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருந்தால், அது குறித்து எங்களுக்கு கவலையில்லை,'' என, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என, கர்நாடக மாநில அரசு பிடிவாதமாக உள்ளது. அம்மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை, டில்லியில் பிரதமர்

''மேகதாது அணை கண்டிப்பாக கட்டியே தீருவோம். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருந்தால், அது குறித்து எங்களுக்கு கவலையில்லை,'' என, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என, கர்நாடக மாநில அரசு பிடிவாதமாக உள்ளது. அம்மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து, மேகதாது திட்டத்துக்கு அனுமதி தரும்படி வலியுறுத்தினார். இதற்கிடையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீர் வழக்கம்போல் வழங்கப்படும். கூடுதல் தண்ணீர் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகாவுக்கு உரிமை உள்ளது. மேகதாது அணையை கண்டிப்பாக கட்டியே தீருவோம். கர்நாடக மக்கள் நலன் கருதி இத்திட்டம் செயல்படுத்தப்படும். பிரதமரும், மத்திய அமைச்சரும் விரைவில் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கட்டும்; வேண்டுமானால் உணவு சாப்பிடட்டும். எங்களுக்கு சம்பந்தமும் இல்லை; கவலையுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilarasan Tamilan - Alain,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஆக-202112:11:15 IST Report Abuse
Tamilarasan Tamilan ஆடு அண்ணாமலை உனது கர்நாடக விசுவாசம் பற்றியம் நீ நடத்தும் நாடகம் பற்றியும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு தெரியுமே அதனால்தான் அசால்ட்டா சொல்றார் நீ என்ன வென பண்ணுனு. உனக்கு திரணியிருந்தால் நீ சார்ந்திருக்கும் மோடி அரசிடம் முறையிட்டு தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை காக்கும் காவிரிப்பிரச்சினைக்கு மோடி தமிழகத்திற்கு ஆதரவாக பேச வை பார்ப்போம்.
Rate this:
Cancel
D.Swaminathan - Velechery,இந்தியா
01-ஆக-202109:50:26 IST Report Abuse
D.Swaminathan How dare karnataka CM speaking about the dam. None of the BJP leaders in central didn't their mouth. It is politics for vote bank. In karnataka the EX CM not undertake any development work for the people and during covid-19, lot of malpractices are happening like allotment of oxygen cylinders in block and more bribe for hospital covid admission etc. So in karnataka BJP got bad name and in order to remove. they took meghdoot dam is a weapon. Actually construction of dam in the flowing river is not good for environment.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X