வழிபாட்டு தலங்களுக்கு பொது சட்டம் கோரி வழக்கு

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி-'ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோரின் வழிபாட்டு தலங்களை மாநில அரசுகளின் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். அனைத்து மதங்களுக்கும் பொதுவான சட்டம் உருவாக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஜீயர் ஸ்வாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடில்லி-'ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோரின் வழிபாட்டு தலங்களை மாநில அரசுகளின் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். அனைத்து மதங்களுக்கும் பொதுவான சட்டம் உருவாக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



latest tamil news



ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஜீயர் ஸ்வாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் பார்சி இன மக்களுக்கு தங்கள் வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான சொத்துக்களை பராமரிக்கும், நிர்வகிக்கும், புதிய சொத்து வாங்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் ஹிந்து, சீக்கியர், ஜெயின், புத்த மதத்தினருக்கு இதுபோன்ற உரிமை வழங்கப்படவில்லை. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இந்த மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் உள்ளன.


latest tamil news


மத விவகார நிர்வாகத்தில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என அரசியல் சாசனம் கூறிஉள்ளது.குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களே அந்த மதத்துக்கு சொந்தமான வழிபாட்டு தலங்கள், சொத்துக்களை சிறப்பாக பராமரிக்க முடியும். மாநில அரசுகளால் செய்ய முடியவில்லை.முஸ்லிம், பார்சி, கிறிஸ்துவ மதங்களுக்கு வழங்கியுள்ளதுபோல் ஹிந்து, ஜெயின், புத்த, சீக்கிய மதத்தினருக்கும் தங்கள் மத வழிபாட்டு தலங்களை பராமரிக்கும், நிர்வகிக்கும் அதிகாரம், உரிமை வழங்கப்பட வேண்டும்.இல்லையெனில் நாடு முழுதும் அனைத்து மதங்களுக்கும் பொதுவான விதிகளை உருவாக்கும்படி, மத்திய அரசு மற்றும் சட்ட கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயும் இதுபோன்ற மனுவை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஆக-202118:20:29 IST Report Abuse
மதுமிதா கண்யடிப்பாக பொது சட்டம் அது தனிச்சட்டம் போல் வழிபாட்டு தலங்களை கட்சிகள்தன்னிச்சை யாக செயல் படக் கூடாதுகொரோனாவை காரணம் காட்டி இந்து கோயில்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப் படுவது ஏற்புடையது அல்ல.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
01-ஆக-202113:18:45 IST Report Abuse
r.sundaram மேலும் இங்கு தமிழகத்தில் சிறுபான்மையினர் என்று கூறிக்கொண்டு, கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வழிபாட்டு இடங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் தரப்படுகிறது. ஆனால் ஹிந்து கோவில்களுக்கு வியாபாரஸ்தலம் என்று அந்த விகிதத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரிய வில்லை. அரசியல் சட்டத்தின்முன் அனைவரும் சமம், ஆனால் சிறுபான்மையினர் அதிக சமம் போலிருக்கிறது.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
01-ஆக-202112:49:35 IST Report Abuse
தஞ்சை மன்னர் அறிவாளிகளுக்கு ஒரு அட்வைஸ், இங்கே வழக்கு பதிவு செய்து இருக்கும் அறிவாளிக்கு சேர்த்துதான் கோவில் நிலங்கள் மற்றும் அது சார்ந்த சொத்துக்கள் எல்லாம் மன்னர்கள் அந்த காலகட்டத்தில் நிர்வகித்து குடிமக்களிடம் இருந்து பெறப்பட்டது அதில் இருந்து வரும் வருமானம் அந்த வழிபட்டு தளங்களை பராமரிக்க வும் மக்களின் நலம் காக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது அனால் இன்று அதை அனுபவிக்க துடிக்கும் கும்பல் பிட்சை எடுத்து உண்டு வந்தது அதை கால போக்கில் கொள்ளை அடிக்கமுயலுகின்றது , அது மட்டும் இல்லை இவ்வளவு பெரிய சொத்துக்களில் இவர்களின் பங்கு ஒரு நகக்கண் அளவுக்கு கூட உதவாத கும்பல் கொள்ளை அடிக்க முயலவே இந்த திட்டம் இதற்க்கு தான் இவ்வரிகள் மத சாயம பூசி கொண்டு திரிகிறது 326
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X