சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.பி., போல பேசி மோசடி: கில்லாடி 'தம்பதி' அதிரடி கைது

Added : ஆக 01, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:டி.எஸ்.பி., எனக் கூறி, ரியல் எஸ்டேட் அதிபரிடம், 10 லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற பெண்ணையும், இன்ஸ்பெக்டராக நடித்த அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், கண்டியூரைச் சேர்ந்தவர் சரவணன், 51. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கும், துாத்துக்குடியை சேர்ந்த பார்த்திபன், 28 அவரது மனைவி ஜனனி, 25 என்பவருக்கும், முகநுால் மூலம் பழக்கம் ஏற்பட்டது.ஜனனி,
 டி.எஸ்.பி., போல பேசி மோசடி: கில்லாடி 'தம்பதி' அதிரடி கைது

தஞ்சாவூர்:டி.எஸ்.பி., எனக் கூறி, ரியல் எஸ்டேட் அதிபரிடம், 10 லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற பெண்ணையும், இன்ஸ்பெக்டராக நடித்த அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், கண்டியூரைச் சேர்ந்தவர் சரவணன், 51. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கும், துாத்துக்குடியை சேர்ந்த பார்த்திபன், 28 அவரது மனைவி ஜனனி, 25 என்பவருக்கும், முகநுால் மூலம் பழக்கம் ஏற்பட்டது.ஜனனி, தனக்கு திருமணமான விஷயத்தை மறைத்து, சரவணனிடம் பழகி உள்ளார். அவ்வப்போது, இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி ஜனனி, சரவணனிடம் இருந்து, 7 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.மேலும், சரவணனிடம் பணம் கறக்க முடிவு செய்த ஜனனி, முகநுாலில் ரம்யா என்ற பெயரில் போலியாக ஒரு ஐ.டி., உருவாக்கி, அதன் மூலம் நட்பை தொடர்ந்துள்ளார். கடந்த 28ம் தேதி, துாத்துக்குடி டி.எஸ்.பி., என சரவணனிடம், போனில் அறிமுகம் செய்து கொண்ட ஜனனி, ''நீங்கள் பழகிய ரம்யா தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் உங்கள் பெயர் உள்ளதால், உங்களிடம் விசாரிக்க வேண்டும்,'' எனக் கூறியுள்ளார்.பயந்து போன சரவணன், வழக்கில் இருந்து தப்பிக்க 10 லட்சம் ரூபாய் தருவதாக, கூறியுள்ளார்.இதை, சதாகமாக பயன்படுத்திக் கொண்ட ஜனனி, தன் கணவன் பார்த்திபனை இன்ஸ்பெக்டர் போல, கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்தார்.கடந்த 29ம் தேதி கும்பகோணம் வந்த பார்த்திபன், இன்ஸ்பெக்டர் என சரவணனிடம் அறிமுகம் செய்து கொண்டு, 10 லட்சம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த சரவணன், 63 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, மீதி பணம் தரும் வரை, பார்த்திபனை ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளார். நண்பர்கள் இருவருடன் சென்று பார்த்திபனிடம் விசாரித்துள்ளார்.அப்போது தான், இன்ஸ்பெக்டர் இல்லை எனவும், தன் மனைவி ஜனனி பணம் பறிக்க முயன்றதையும், பார்த்திபன் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து, ஏற்கனவே வாங்கிய 7 லட்சம் ரூபாயை கொண்டு வந்தால், கணவனை விடுவிப்பதாக, போனில் ஜனனியை மிரட்டினர். ஜனனி துாத்துக்குடி போலீசில் புகார் அளித்து விட்டு கும்பகோணம் வந்தார். கணவனை மீட்டுத்தரக் கோரி, கும்பகோணம் மேற்கு போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்தார். போலீசாரர், சரவணன் அவரது நண்பர்கள் மற்றும் பார்த்திபன் ஆகியோரை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.ஜனனியும், அவரது கணவரும் போலீஸ் போல பேசி, சரவணனிடம் பணம் பறிக்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து, ஜனனி, பார்த்திபன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X