தாமதமின்றி மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : ஆக 01, 2021
Share
Advertisement
புதுடில்லி: ‛'தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, காலதாமதமின்றி மேல்முறையீடு செய்வதற்கான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்,'' என, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019 ஜூனில் ஊழல் வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு,

புதுடில்லி: ‛'தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, காலதாமதமின்றி மேல்முறையீடு செய்வதற்கான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்,'' என, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஜூனில் ஊழல் வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பில் 647 நாட்களுக்கு பின் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த தாமதம் என, சி.பி.ஐ., சொல்வதை ஏற்க முடியாது. ஏனெனில் தீர்ப்பு வெளியானபோது, நாட்டில் கொரோனா தாக்கம் இல்லை.
தேவையின்றி காலதாமதமாக மேல்முறையீடு செய்துள்ளதற்கு தகுந்த காரணங்களை சி.பி.ஐ.,யால் தெரிவிக்க முடியவில்லை. எனவே, காலதாமதமாக மேல்முறையீடு செய்ததால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
சி.பி.ஐ., இனி மேல்முறையீட்டு மனுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு தகவல் தொழில் நுட்ப வசதிகளுடன் நிர்வாக ரீதியிலான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X