பொது செய்தி

இந்தியா

எல்லையில் பதற்றத்தை குறைக்க அசாம் - நாகாலாந்து ஒப்பந்தம்

Added : ஆக 01, 2021
Share
Advertisement
கவுகாத்தி: மிசோரம் மாநிலத்துடனான எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், நாகாலந்து மாநில எல்லையில் பதற்றத்தை குறைக்க, அம்மாநிலத்துடன் அசாம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கிடையே எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக அசாம் முதல்வர் மீது, மிசோரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.கண்டனம்வடகிழக்கு மாநிலங்களிடையே எல்லைப் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து

கவுகாத்தி: மிசோரம் மாநிலத்துடனான எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், நாகாலந்து மாநில எல்லையில் பதற்றத்தை குறைக்க, அம்மாநிலத்துடன் அசாம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கிடையே எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக அசாம் முதல்வர் மீது, மிசோரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கண்டனம்

வடகிழக்கு மாநிலங்களிடையே எல்லைப் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அசாம் - மிசோரம் எல்லையில் சமீபத்தில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் அசாம் போலீசார் ஆறு பேர் பலியாயினர். 'மிசோரமுக்கு யாரும் செல்ல வேண்டாம்' என, அசாம் மக்களை, அம்மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறினார். இதற்கு மிசோரம் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அசாம் - நாகாலாந்து எல்லையில் பதற்றத்தை குறைக்கும் வகையில் இரு மாநிலங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு மாநில தலைமை செயலர்களும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தில், 'எல்லையிலிருந்து போலீசாரை விலக்கிக் கொள்ள இரு மாநில அரசுகளும் சம்மதித்து உள்ளன' என, கூறப்பட்டுள்ளது.


வழக்கு

இதற்கிடையே, அசாம் - மிசோரம் இடையே நடந்த எல்லை மோதல் தொடர்பாக, அசாம் முதல்வர் மற்றும் ஆறு அதிகாரிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ், மிசோரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இது குறித்து அசாம் முதல்வர் சர்மா கூறுகையில், ''எல்லை மோதல் தொடர்பான விசாரணைக்கு நான் தயார். ஆனால், இந்த விசாரணையை, சி.பி.ஐ., போன்ற பொது அமைப்பு மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X