பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலால் ஏலக்காய் மகசூல் 30 சதவீதம் பாதிக்க வாய்ப்பு

Added : ஆக 01, 2021
Share
Advertisement
கம்பம்--கொரோனா பரவலால் ஏலக்காய் மகசூல் 30 சதவீதம் வரை பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஏல விவசாயிகள் கூறினர். கொரோனா கட்டுப்பாடுகளால் கேரளா இடுக்கி மாவட்ட ஏலத்தோட்டங்களில் வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் அங்கு செல்ல முடிய வில்லை. கடந்தாண்டு ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்களும் திரும்பவில்லை.கூலி உயர்வு, உரம் பூச்சி மருந்து விலை உயர்வு,

கம்பம்--கொரோனா பரவலால் ஏலக்காய் மகசூல் 30 சதவீதம் வரை பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஏல விவசாயிகள் கூறினர். கொரோனா கட்டுப்பாடுகளால் கேரளா இடுக்கி மாவட்ட ஏலத்தோட்டங்களில் வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் அங்கு செல்ல முடிய வில்லை. கடந்தாண்டு ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்களும் திரும்பவில்லை.கூலி உயர்வு, உரம் பூச்சி மருந்து விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை, சீதோஷ்ணநிலை மாற்றம் போன்ற காரணங்களால் 25 முதல் 30 சதவீதம் வரை மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.பாம்பாடும்பாறை ஏலக்காய் ஆராய்ச்சி நிலைய தலைவர் முத்துசாமி முருகேசன் கூறுகையில், ''50 ஆயிரம் எக்டேரில் ஏலக்காய் சாகுபடியாகிறது.ஆண்டிற்கு 20 ஆயிரம் டன் உற்பத்தியாகும். 35 ஆயிரம் சிறுவிவசாயிகள் மூலம் 60 சதவீத உற்பத்தி கிடைக்கும். தொழிலாளர் பற்றாக்குறை மட்டுமல்லாமல் அதிக மழை பெய்ததால், ஏலச்செடிகளில் தேனீக்களால் நடைபெறும் மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X