விலை எகிறிய மளிகை பொருட்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விலை எகிறிய மளிகை பொருட்கள்

Added : ஆக 01, 2021
Share
விருதுநகர்,--விருதுநகர் மார்க்கெட்டில் சன்பிளவர் ஆயில், கடலை புண்ணாக்கு, பாசிப்பயறு, சர்க்கரை விலை உயர்ந்தும் தொலி உளுந்தம்பருப்பு குறைந்தும் காணப்படுகிறது.இங்கு கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2750, நல்லெண்ணெய் ரூ.4100, சன்பிளவர் எண்ணெய் ரூ.200 அதிகரித்து ரூ.2400, பாமாயில் ரூ.100 அதிகரித்து ரூ.2140, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.800 அதிகரித்து ரூ.5600, 100 கிலோ சர்க்கரை ரூ.120 அதிகரித்து ரூ.3600, 90 கிலோ பை

விருதுநகர்,--விருதுநகர் மார்க்கெட்டில் சன்பிளவர் ஆயில், கடலை புண்ணாக்கு, பாசிப்பயறு, சர்க்கரை விலை உயர்ந்தும் தொலி உளுந்தம்பருப்பு குறைந்தும் காணப்படுகிறது.

இங்கு கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2750, நல்லெண்ணெய் ரூ.4100, சன்பிளவர் எண்ணெய் ரூ.200 அதிகரித்து ரூ.2400, பாமாயில் ரூ.100 அதிகரித்து ரூ.2140, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.800 அதிகரித்து ரூ.5600, 100 கிலோ சர்க்கரை ரூ.120 அதிகரித்து ரூ.3600, 90 கிலோ பை மைதா ரூ.10 அதிகரித்து ரூ.3530, 55 கிலோ பொரிகடலை ரூ.4100, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.9000, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.9500, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.300 அதிகரித்து ரூ.7500, உளுந்து லயன் ரூ.200 அதிகரித்து ரூ.7800, பாசிப்பயறு நாடு 100 கிலோ ரூ.200 அதிகரித்து ரூ.6200, பாசிப்பயறு லயன் பருவட்டு ரூ.200 குறைந்து ரூ.9600க்கு விற்கப்படுகிறது.பாசிப்பயறு இந்தியா பருவட்டு ரூ.700 அதிகரித்து ரூ.8500, மசூர் பருப்பு பருவட்டு ரூ.8800, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.500 அதிகரித்து ரூ.10,500, 100 கிலோ தொலி உளுந்தம் பருப்பு நாடு வகை ரூ.400 குறைந்து ரூ.8000, 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.300 அதிகரித்து ரூ.8300, பட்டாணி பருப்பு ரூ.7000, நாட்டு வத்தல் குவிண்டாலுக்கு ரூ.8000-9000, ஆந்திரா ஏ.சி., வத்தல் ரூ.12,500 -- 13,500, முண்டு வத்தல் வரத்து இல்லை. மல்லி நாடு 40 கிலோ ரூ.3500-4000க்கு விற்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X