ஆன்லைனில் இரட்டிப்பு பணமோசடி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் இரட்டிப்பு பணமோசடி

Added : ஆக 01, 2021
Share
-ராமநாதபுரம்---ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கர்ப்பிணியிடம் ஆன்லைன் முதலீட்டில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது.பரமக்குடி மேலாய்க்குடியை சேர்ந்த இவர் வீட்டில் இருந்தபடி இணையதளம் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினார். வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது குறிப்பிட்ட பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறினர். முதலில்

-ராமநாதபுரம்---ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கர்ப்பிணியிடம் ஆன்லைன் முதலீட்டில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

பரமக்குடி மேலாய்க்குடியை சேர்ந்த இவர் வீட்டில் இருந்தபடி இணையதளம் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினார். வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது குறிப்பிட்ட பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறினர். முதலில் ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை முதலீடு செய்தார் பணம் இரட்டிப்பாக கிடைத்தது.இந்நிலையில் பீகார், அசாமை சேர்ந்த இருவர் அவரிடம் பேசியபோது, ''நாங்கள் முதலீடு செய்து நிறைய சம்பாதித்துள்ளோம்'' என்றனர். இதை நம்பியவர் பிரசவ செலவுக்கு வைத்திருந்த ரூ.3 லட்சத்தை முதலீடு செய்த நிலையில் மோசடி செய்யப்பட்டது. ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X