சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோதத்தில் வாலிபர் கொலை

Added : ஆக 01, 2021
Share
Advertisement
தேவகோட்டை--சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே முன்விரோதத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.தேவகோட்டை தாலுகா செலுகையை சேர்ந்தவர்வேலு மகன் தென்னரசு 29. இவருக்கும் சிவனுாரை சேர்ந்த மணிகண்டனுக்கும் மணல் விற்பனை, ஜே.சி.பி., இயந்திரம் வாடகை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இரு தரப்பினருக்கும் நேற்று மாலை மோதல் ஏற்பட்டது. மணிகண்டன் தரப்பினர் கத்தியால் குத்தியதில்

தேவகோட்டை--சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே முன்விரோதத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.தேவகோட்டை தாலுகா செலுகையை சேர்ந்தவர்வேலு மகன் தென்னரசு 29. இவருக்கும் சிவனுாரை சேர்ந்த மணிகண்டனுக்கும் மணல் விற்பனை, ஜே.சி.பி., இயந்திரம் வாடகை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இரு தரப்பினருக்கும் நேற்று மாலை மோதல் ஏற்பட்டது. மணிகண்டன் தரப்பினர் கத்தியால் குத்தியதில் தென்னரசு இறந்தார். தாக்குதலில் தென்னரசுவின் அண்ணன் காளிதாஸ் 31, குருப்புளி சுரேஷ் 32, இறங்குன்றம்கணேசன் படுகாயம்அடைந்தனர். மூவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.டி.எஸ்.பி. ரமேஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையே தென்னரசுவின் உடல் திருவாடானை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் நேற்றிரவு திருவாடானை-தொண்டி ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X