சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துபாயில் வாலிபர் தற்கொலை உடலை கொண்டு வர மனு

Added : ஆக 01, 2021
Share
Advertisement
உத்தமபாளையம்-துபாயில் தொழில் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்ட சகோதரர் உடலை சொந்த ஊர் கொண்டுவர உதவும்படி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக், 33; கேட்டரிங்கில் டிப்ளமா படித்தவர். இவர், கடந்த 12 ஆண்டுகளாக துபாயில் உள்ள 'எமிரேட்ஸ் பிளைட் கேட்டரிங்' நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் மனைவி நிவேதா சமீபத்தில்

உத்தமபாளையம்-துபாயில் தொழில் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்ட சகோதரர் உடலை சொந்த ஊர் கொண்டுவர உதவும்படி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக், 33; கேட்டரிங்கில் டிப்ளமா படித்தவர். இவர், கடந்த 12 ஆண்டுகளாக துபாயில் உள்ள 'எமிரேட்ஸ் பிளைட் கேட்டரிங்' நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் மனைவி நிவேதா சமீபத்தில் பிரசவத்திற்காக துபாயில் இருந்து திரும்பினார்.இதற்கிடையே, கொரோனா பரவலால் அங்கு இருந்த கார்த்திக்கிற்கு 50 சதவீத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால், அறைகளை குத்தகைக்கு எடுத்து வாடகைக்கு விடும் தொழில் செய்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த கார்த்திக், தற்கொலை செய்ய போவதாக சகோதரர் செந்தில்குமாருக்கு வீடியோ அனுப்பினார். அதன்பின் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுபற்றி அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர உதவும்படி சகோதரர் செந்தில்குமார், தேனி கலெக்டர் முரளிதரனிடம் நேற்று மனு அளித்தார்.செந்தில்குமார் கூறுகையில், ''எமிரேட்ஸ் பிளைட் கேட்டரிங் துபாய் அரசு நிறுவனமாகும். கொரோனா கட்டுப்பாடுகளால் உடலை அனுப்ப முடியவில்லை என கூறுகின்றனர். ''கார்த்திக்கிற்கு குழந்தை பிறந்து 40 நாட்களே ஆகிறது. அதன்முகத்தை கூட பார்க்கவில்லை. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு உதவ வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X