பொது செய்தி

தமிழ்நாடு

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்... இன்று உலக காகித தினம்

Added : ஆக 01, 2021
Share
Advertisement
காகிதம் இல்லாத நாடே இல்லை, காகிதம் பயன்படுத்தாத மனிதனே இல்லை.பண்டைய காலத்தில் தகவல் தொடர்பிற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்கும் ஓலைச்சுவடிகள் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டவைகளை இன்றைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ள காகிதமே உதவுகிறது. எத்தனையோ டெக்னாலஜி தகவல் தொடர்பிற்கு பயன்பட்டாலும் அன்புள்ள அம்மா, அன்புள்ள தோழா நலம் நலம் அறிய
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்... இன்று உலக காகித தினம்

காகிதம் இல்லாத நாடே இல்லை, காகிதம் பயன்படுத்தாத மனிதனே இல்லை.பண்டைய காலத்தில் தகவல் தொடர்பிற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்கும் ஓலைச்சுவடிகள் பயன்படுத்தப்பட்டது.

அவ்வாறு பதிவு செய்யப்பட்டவைகளை இன்றைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ள காகிதமே உதவுகிறது. எத்தனையோ டெக்னாலஜி தகவல் தொடர்பிற்கு பயன்பட்டாலும் அன்புள்ள அம்மா, அன்புள்ள தோழா நலம் நலம் அறிய ஆவல் என காகிதத்தில் எழுதி வரும் கடிதத்திற்கு ஈடாகாது.

அதிலுள்ள உயிர் மற்றவைகளில்கிடைக்காது. நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நாளிதற்களில் அதிகாலையில் சூடானசுவையுடன் காபி அருந்தியப்படி படித்து தெரிந்து கொள்வது இருக்கே தனி சுகம். அந்த வகையில் செய்தித்தாள் மகிமை இன்றும் முக்கியமாக கருதப்படுகிறது.

எந்த துறையாக இருந்தாலும் அதில் காகித பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது. காலையில் கண்விழித்தவுடன் படிக்கும் செய்திதாளிலிருந்து இரவு தூங்கும் முன் படிக்கும் புத்தகம் வரை அனைத்தும் காகித்ததால் ஆனவையே. காகிதம் சமூக மாற்றத்திற்கான ஆயுதம். பல்வேறு சிந்தையாளர்களி் படைப்புகளையும் முற்போக்கு சிந்தனைளையும் கண்டுபிடிப்புகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆயுதமே காகிதம். காகிதம் 100 சதவீதம் மறு சுழற்சிக்கு ஏதுவானது.

கம்ப்யூட்டர்களை அதிகம் பயன்படுத்தும் அமெரிக்கா, ஜெர்மனி சுவீடன் போன்ற நாடுகளில் ஒரு மனிதன் சராசரியாக ஒரு ஆண்டில் காகிதத்தினை அமெரிக்கா 232 கிலோக, ஐரோப்பா215 கிலோ சுவீடன் 257 கிலோ ஜெர்மனி 215 கிலோ பயன்படுத்துகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த காகிதத்தை கொண்டாடும் வகையில் ஆக.,1ல் காகித தினம் கொண்டாடப்படுகிறது. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு மட்டும் பெயர் பெற்றதல்ல காகிததயாரிப்புக்கும் பெயர்பெற்று விளங்குகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து காகிதம் இறக்குமதி செய்யப்பட்டது. காகிதத்தை வாங்கி தேவைகளுக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்தி விற்பனை செய்தனர். ஆனால் தற்போது சிவகாசியிலேயே காகிதம் தயாரிக்கும் ஆலைகள் அதிகம் உள்ளன.

இங்கிருந்து வெளிமாநிலம் வெளி நாட்டிற்கு காகிதம் அனுப்பப்படுகிறது. காலண்டர் என்றாலே சிவகாசிதான் நினைவுக்கு வரும். காலண்டரில் காகிதம் பயன்பாடுதான் முக்கியமானது. நோட்டு புத்தகம் எனஅனைத்து விதமான காகித பயன்பாடு பொருட்கள் சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. காகிதம் தயாரித்த பின் தேவைக்கேற்ப கட்டிங் செய்யும் டிரேடர்ஸ் கம்பெனிகள் அதிகளவில் சிவகாசியில் உள்ளன.


தவிர்க்கவே முடியாதுகாகிதத்தில் தான் குழந்தைகளின் எழுதும் திறனை வளர்க்க முடியும். காகிதத்தில் எழுதி பார்க்க எளிதில் மனனம் ஆகும். மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்த காகிதத்தினை தவிர்க்கவே முடியாது. காகித தொழிலை வளரச் செய்ய வேண்டும். இங்கு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான நோட்டு தேர்வு எழுத பயன்படும் காகிதம்வரவு செலவு நோட்டு உள்ளிட்ட பல்வேறு வகையானவை தயாரிக்கப்படுகிறது.

பாலகிருஷ்ணன்,

பேப்பர் மெர்ச்சண்ட் அசோசியேஷன் தலைவர்

சிவகாசிமுறு சுழற்ச்சி முறையில் காகிதம்எத்தனையோ நவீன சாதனங்கள் வந்தாலும் காகிதத்தின் பயன்பாடு அளப்பறியாது. மரங்களை அழித்துதான் காகிதம் தயாரிக்கப்படுகிறது. என்பது தவறான கருத்து. இந்தியாவில் 53 சதவீதம் மறு சுழற்ச்சி முறையிலேயே காகிதம் தயாரிக்கப்படுகிறது. 25 சதவீதம் மரங்களால் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அந்த மரங்களும் பேப்பர் மில் வைப்பவர்களால் வளர்க்கப்படும் மரங்களே 17 சதவீதம் விவசாய கழிவுகளான கரும்புச்சக்கை, சோளத்தட்டை, போன்றவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கப்படுகிறது.

ராதாசேகரன்,

பேப்பர் மெர்ச்சண்ட் அசோசியேஷன் செயலாளர்

சிவகாசிஎப்போதும் எடுத்து பார்க்கலாம்


கல்வி, தொழில், மருத்துவம் பத்திரபதிவு என எந்ததுறையாக இருந்தாலும் காகிதத்தின் பயன்பாடு இன்றியமையாதது. பட்டாசு தீப்பெட்டி, அச்சு உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் காகிதத்தின் பயன்பாடு முக்கியமாக உள்ளது. மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் தவிர்த்து காகிதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் ஏதேனும் குறைபாட்டால் அழிய வாய்ப்புள்ளது. ஆனால் காகிதத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை எப்போது வேண்டுமானாலும் எடுத்து விடலாம்

ஜெய்சங்கர்

தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்

சிவகாசி


இயற்கையை பாதுகாப்போம்காகிதம்தயாரிப்பவர்கள் மரத்தை வெட்டினால் 5 மரங்களை நட்டு வளர்க்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த எளிதில் மட்கும் தன்மையுடையது. அதே நேரம் 100 முதல் 500 ஆண்டு வரை நிலைக்கும் உடைய காகிதங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இயற்கை வளங்களை அழிக்கும் மாசுபடுத்துசம் பொருட்களை தவிர்த்து காகிதத்தால் ஆன பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

சுந்தர்

ஸ்ரீ விநாயகா பேப்பர் கம்பெனி

பங்குதாரர், சிவகாசி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X