சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை கொன்று நாடகம் கணவர் உட்பட இருவர்‍ கைது

Added : ஆக 01, 2021
Share
Advertisement
ஓசூர்-மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த காடுமுச்சந்திரத்தை சேர்ந்தவர் மாரேகவுடா, 38 தொழிலாளி; இவரது மனைவி பாரதி, 28; ஜூலை, 26ல் பாரதி துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவரது தந்தை பைரப்பா, மகளின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் அளித்தார். போலீசார் அவரது கணவர் மாரேகவுடாவிடம்

ஓசூர்-மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த காடுமுச்சந்திரத்தை சேர்ந்தவர் மாரேகவுடா, 38 தொழிலாளி; இவரது மனைவி பாரதி, 28; ஜூலை, 26ல் பாரதி துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவரது தந்தை பைரப்பா, மகளின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் அளித்தார். போலீசார் அவரது கணவர் மாரேகவுடாவிடம் விசாரித்ததில், கிரிஸ், 28 என்ற வாலிபருடன், பாரதிக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரிந்தது. இதனால் அவரை அடித்து கொலை செய்த மாரேகவுடா, தன் தம்பி உதவியுடன் மனைவியை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒப்பு கொண்டார். இதையடுத்து போலீசார், மாரேகவுடா, அவரது 33 வயது தம்பி ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.மகனை கொன்ற தந்தை கைதுகள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 70; இவரது மகன் அலெக்ஸ் பாண்டியன், 35. அண்ணாமலை தன் தந்தைக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து வருகிறார். தாத்தா சொத்தை தனக்கு பிரித்துத் தரும்படி அலெக்ஸ்பாண்டியன் கேட்டு தந்தையிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை இருவருக்கும் தகராறு எற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர்.இரவு அலெக்ஸ்பாண்டின் வீட்டிற்கு வெளியே துாங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் குடிபோதையில் சென்ற அண்ணாமலை, துாங்கி கொண்டிருந்த மகன் தலையில் கட்டையால் தாக்கினார். இதில் அலெக்ஸ்பாண்டியன் இறந்தார். திருக்கோவிலுார் போலீசார், அண்ணாமலையை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X