அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை நுாற்றாண்டு விழா கிருஷ்ணசாமி சாடல்

Added : ஆக 01, 2021
Share
Advertisement
மதுரை- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் அறிக்கை:எல்லா மாநிலங்களிலும் சட்டசபை இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் மேல் சபை இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. நாடு சுதந்திரம் பெற்ற பின், 1952ல் நடந்த முதல் தேர்தலில் இருந்து சட்டசபை வரலாறு துவங்குகிறது. எனவே சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட தமிழக சட்டசபையின் வயது 69 மட்டுமே. ஆனால், ஆங்கிலேயர்

மதுரை- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் அறிக்கை:எல்லா மாநிலங்களிலும் சட்டசபை இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் மேல் சபை இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

நாடு சுதந்திரம் பெற்ற பின், 1952ல் நடந்த முதல் தேர்தலில் இருந்து சட்டசபை வரலாறு துவங்குகிறது. எனவே சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட தமிழக சட்டசபையின் வயது 69 மட்டுமே. ஆனால், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் சட்டசபை பேரவை போன்ற அமைப்பு 1936லிருந்து செயல்பட்டு வந்துள்ளது. அந்த 16 ஆண்டுகளையும் கணக்கில் சேர்த்து கொண்டால் தமிழக சட்டசபைக்கு வயது 85 மட்டுமே. இந்த இரண்டில் ஒன்று மட்டுமே சட்டசபை ஆண்டு விழாவிற்கான சரியான அளவுகோலாக எடுக்க முடியும். ஆனால் 2021 ஆக., 2 சட்டசபை நுாற்றாண்டு விழாவாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அது என்ன கணக்கு என தெரியவில்லை. வேறு எங்கிருந்து துவங்கினாலும் இவர்களின் நுாற்றாண்டு கணக்கு தப்பு கணக்காகவே இருக்கிறது.சட்டசபை நுாற்றாண்டு விழா எனில் ஒர் அரங்கத்திற்குள் மட்டும் நடத்தப்படக்கூடிய விழாவாக இருக்க கூடாது.

அது மக்களின் விழாவாகவும் இருக்க வேண்டும்.ஆனால் அப்படி இல்லாமல் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து கொண்டாடும் சடிடசபை நுாற்றாண்டு விழா முழுக்க முழுக்க திராவிட அரசியல் சார்ந்த விழாவாக உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X