சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'செல்பி' எடுக்க சென்ற வாலிபர் சிறுத்தை தாக்கி படுகாயம்

Added : ஆக 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
திருச்சி-துறையூர் அருகே, சிறுத்தை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த உப்பிலியபுரம் ஆங்கியம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில், மலைக்கரடு உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த ஹரிபாஸ்கரன், 20 நேற்று மாலை 3:00 மணிக்கு, 'செல்பி' எடுப்பதற்காக, மலைக்கரடுக்கு சென்றுள்ளார். கரடில் உள்ள குகைக்கு முன், நின்று செல்பி எடுத்த போது, குகைக்குள் பதுங்கி இருந்த
 'செல்பி' எடுக்க சென்ற வாலிபர் சிறுத்தை தாக்கி படுகாயம்

திருச்சி-துறையூர் அருகே, சிறுத்தை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த உப்பிலியபுரம் ஆங்கியம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில், மலைக்கரடு உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த ஹரிபாஸ்கரன், 20 நேற்று மாலை 3:00 மணிக்கு, 'செல்பி' எடுப்பதற்காக, மலைக்கரடுக்கு சென்றுள்ளார். கரடில் உள்ள குகைக்கு முன், நின்று செல்பி எடுத்த போது, குகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டதால், காட்டுப்பகுதியில், கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த துரைசாமி, 59, என்ற விவசாயி, சிறுத்தையிடம் சிக்கியவரை காப்பாற்ற முயன்றார். அவரையும், சிறுத்தை தாக்கி விட்டு, தப்பி ஓடியது.படுகாயமடைந்த இருவரும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தகவல் அறிந்த திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று, சிறுத்தை நடமாட்டத்துக்கான தடயங்களை சேகரித்து வருகின்றனர்.தண்டோரா எச்சரிக்கைதுறையூர் அருகே, பச்சைமலை வனப்பகுதி உள்ளது. இங்கு, முயல், நரி, மான் போன்ற விலங்குகள் அதிகம் உள்ளன. சிறுத்தை, கரடி, யானை போன்ற விலங்குகள் இருப்பதில்லை. தற்போது, சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, மலைக்கிராம மக்கள் தெரிவிப்பதால், வனத்துறை யினர் தண்டோரா போட்டு, எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
02-ஆக-202109:52:12 IST Report Abuse
Sandru வயோதிகர் என்றும் எழுவது வயது என்றும் அச்சாகி இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
01-ஆக-202113:59:43 IST Report Abuse
RaajaRaja Cholan அய்யா இந்த படத்தில் இருப்பவர் வாலிபரா , கொஞ்சம் மனசாட்சி ??
Rate this:
Sam - Thoothukudi,இந்தியா
01-ஆக-202121:23:50 IST Report Abuse
Samஹா ஹா ...அதே நேரத்தில் ஹரிகிருஷ்ணன் வயசு இருபது னு போட்டிருக்கு...
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
02-ஆக-202107:08:43 IST Report Abuse
Amal Anandanசெய்திகளை படிக்கும் வழக்கமே உங்க கும்பலிடம் கிடையாது ?...
Rate this:
Ganesh Kumar 007 - THOOTHUKKUDI,இந்தியா
02-ஆக-202109:50:47 IST Report Abuse
Ganesh Kumar 007பாஸ் , இவரு காப்பாற்ற போனவர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X