சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் அருகில் 14 சவரன் நகை பறிப்பு

Added : ஆக 01, 2021
Share
Advertisement
ஈரோடு-போலீஸ் ஸ்டேஷன் அருகே, மூதாட்டியிடம் போலீஸ் போல் நடித்து 14 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.ஈரோடு, நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சென்னியப்பன், 71; விவசாயியான இவர், உடல் நலக்குறைவால், ஈரோடில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற, மனைவி சரஸ்வதியுடன், 69, நேற்று காலை வந்தார். மருத்துவமனையில் ரத்த, சிறுநீர் மாதிரி கொடுத்த பின், இருவரும் சாப்பிட சென்றனர்.

ஈரோடு-போலீஸ் ஸ்டேஷன் அருகே, மூதாட்டியிடம் போலீஸ் போல் நடித்து 14 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

ஈரோடு, நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சென்னியப்பன், 71; விவசாயியான இவர், உடல் நலக்குறைவால், ஈரோடில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற, மனைவி சரஸ்வதியுடன், 69, நேற்று காலை வந்தார். மருத்துவமனையில் ரத்த, சிறுநீர் மாதிரி கொடுத்த பின், இருவரும் சாப்பிட சென்றனர். சென்னியப்பன் முன் செல்ல, பின்னால் சரஸ்வதி சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர், தங்களை போலீஸ் என கூறியுள்ளனர்.'காரில் எஸ்.பி., அமர்ந்துள்ளார்; வழிப்பறி நடக்கும் சூழலில், அதிக நகை போட்டிருக்க வேண்டாம். நகைகளை கழற்றி பையில் வைத்து கொள்ளுங்கள்' என, அறிவுறுத்தினர். இதையடுத்து வளையல், தாலிக்கொடி, தங்கச்சங்கிலி என, ௧௪ சவரன் நகைகளை கழற்றி, தன் பையில் வைக்க சரஸ்வதி முற்பட்டார். இருவரில் ஒரு ஆசாமி, பேப்பரில் வைத்து தருவதாக கூறி, பேப்பரில் மடித்து, அவரே பையில் வைத்தார். அதன்பின் பைக், காரில் வந்தவர்கள் தப்பி சென்றனர்.சில நிமிடங்கள் கழித்து பையில் இருந்த பொட்டலத்தை, சரஸ்வதி பிரித்து பார்த்தார். அதில் கல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். புகார்படி ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், விசாரணை நடத்தினர்.அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷன் அருகில், மர்ம ஆசாமிகள் மூதாட்டியிடம் நகை கொள்ளையடித்து சென்றது, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X