வழிகாட்டி 2.0 நிகழ்ச்சியில் நிபுணர்கள் விளக்கம் திறன்கள் வளர்ப்பின் அவசியம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வழிகாட்டி 2.0' நிகழ்ச்சியில் நிபுணர்கள் விளக்கம் திறன்கள் வளர்ப்பின் அவசியம்

Added : ஆக 01, 2021
Share
'தினமலர்' நாளிதழ் மற்றும் 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' இணைந்து வழங்கும் இரண்டாம் கட்ட 'ஆன்லைன் வழிகாட்டி' நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இதில், 'கோர் இன்ஜினியரிங்' படிப்புகள் Tஎன்றால் என்ன; என்னென்ன பிரிவுகள் இதில் அடங்கும்; கோர் இன்ஜினியரிங் பிரிவுகளில் உள்ள ஏராளமான வேலை வாய்ப்புகள் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ் விரிவாக

'தினமலர்' நாளிதழ் மற்றும் 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' இணைந்து வழங்கும் இரண்டாம் கட்ட 'ஆன்லைன் வழிகாட்டி' நிகழ்ச்சி நேற்று துவங்கியது.

இதில், 'கோர் இன்ஜினியரிங்' படிப்புகள் Tஎன்றால் என்ன; என்னென்ன பிரிவுகள் இதில் அடங்கும்; கோர் இன்ஜினியரிங் பிரிவுகளில் உள்ள ஏராளமான வேலை வாய்ப்புகள் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ் விரிவாக பேசினார். தொடர்ந்து பேசிய நிபுணர் முகமது யூசுப், திறன்களின் வகைகள், அவற்றின் முக்கியத்துவம், தற்போதைய சூழலில், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார்.

'கிஷ்புளோ' நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சம்பந்தம், படிக்கும்போதே வளர்த்துக் கொள்ள வேண்டிய தொழில் முனைவோர் திறன்கள், தொழில் துவங்குவதற்கான முதலீட்டை பெறும் முறை, தமிழக மாணவர்களுக்கு உள்ள பிரகாசமான வாய்ப்புகள் குறித்து, விரிவாக பேசினார். இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'கட் - ஆப்' குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்லுாரியை தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் பேசுகின்றனர்.நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் வாய்ப்புகள் குறித்து, 'ஒர்க்போர்ஸ் மேனேஜ்மெண்ட்' இயக்குனர் சுப்ரமணி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை வழங்குகிறார். இந்நிகழ்ச்சி, 'தினமலர்' மற்றும் 'கல்வி மலர்' இணையதளங்களில் நேரலையில் ஒளிபரப்பாகிறது. இரண்டாம் கட்ட 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது

- நமது நிருபர் -.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X