பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: எம்.ஜி.ஆர்., கொடுத்த இடம்!

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:கடந்த 1977ல், எம்.ஜி.ஆர்., முதல்வர் ஆனதும், அவரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார் காஞ்சி சங்கராச்சாரியார். 'ஆறுபடை முருகனை தரிசிக்க, மக்கள் தமிழகம் முழுதும் செல்கின்றனர். ஒரே இடத்தில் ஆறுபடை முருகனையும் தரிசிக்க வேண்டும். கடற்கரை
இது, உங்கள், இடம், அறுபடை முருகன், கோவில், இடம், எம்.ஜி.ஆர்.,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கடந்த 1977ல், எம்.ஜி.ஆர்., முதல்வர் ஆனதும், அவரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார் காஞ்சி சங்கராச்சாரியார். 'ஆறுபடை முருகனை தரிசிக்க, மக்கள் தமிழகம் முழுதும் செல்கின்றனர். ஒரே இடத்தில் ஆறுபடை முருகனையும் தரிசிக்க வேண்டும். கடற்கரை எதிரில் கோவில் அமைய வேண்டும்; அதற்கு நீங்கள் இடம் தர வேண்டும்' என்றார் சங்கராச்சாரியார்.இதை ஏற்ற எம்.ஜி.ஆர்., சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகில் இடம் வழங்கினார்.

ஒரு வார இதழுக்காக எம்.ஜி.ஆரை பேட்டி கண்ட நடிகை லதா, 'காஞ்சி பெரியவரை சமீபத்தில் தரிசித்து பேசினீர்களா?' என கேள்வி எழுப்பினார்.'ஒரு நல்ல துறவியை, பற்றில்லாத மனம் உடையவரை, பிறருக்காக வாழ்வதையே மாந்தர் கடமை என்ற தத்துவத்தின் ஒட்டுமொத்த உருவமாக காட்சி அளித்த ஒரு மகா பெரியவரை தரிசித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்' என, அவர் பதில் அளித்தார்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவில், தனியார் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ளது. உண்டியல் வசூல் கணக்கு மட்டும் அறநிலையத் துறை கண்காணிப்பில் உள்ளது.இங்கு சென்று வந்தால், தமிழகத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவில்களிலும் தரிசனம் செய்த உணர்வு ஏற்படுகிறது.பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்; எண்ணற்ற திருமணங்கள் நடைபெறுகின்றன.ஆனால், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் இல்லை. கோவில் குருக்களுக்கு மிகக் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.


latest tamil news


எனவே, அறக்கட்டளை வசம் உள்ள இந்த கோவிலை, ஹிந்து அறநிலையத் துறையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.எக்காரணத்தாலும் கோவில் நிர்வாகத்தில் தி.மு.க.,வினரை அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால், கோவிலில் அசைவ விருந்து போடுவர்; கட்சி கூட்டத்தை கோவிலில் நடத்துவர்.அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலங்களை மீட்டெடுத்து வருகிறார் என்பது பாராட்டுக்கு உரியது.'அரசு பராமரிப்பில் உள்ள கோவில்களை, தனியார் வசம் தர முடியாது' என, அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ஆனால், தனியார் வசமுள்ள கோவில்களை அரசுடைமை ஆக்கலாமே!

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஆக-202116:23:28 IST Report Abuse
மாயவரம் சேகர் கட்டுரை அந்த கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.குறை காண ஒன்றுமில்லை.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
01-ஆக-202116:23:23 IST Report Abuse
M  Ramachandran டில்லி மலை மந்திர என்று முருகன் கோயிலை சொல்வார்கள். ஆரம்ப காலத்தில் திரு ஆர் வெங்கடராமன் முயற்சியில் அந்த கோவில் வந்தது. முதலில் அலகு இருந்த சிப்பந்திகளுக்கு சம்பளம் கொடுக்கா மிகுந்த கஷ்ட பட்டார்கள். கோயில் குரூக்காலுக்கும் ஓதுவார் அவர்களுக்கு மட்டும் சிறு வீடு அமைத்து கொடுக்க பட்டது. அப்போனது அவர் தர்மபுரம் ஆதீனத்தை சந்தித்து உதவுமாறு கேட்டார். ஆதீனமும் அவர்கள் ஆதீனத்திலிருந்து அர்ச்சகர் மற்றும் ஓதுவாரை அனுப்பிவைத்தது.பாதி சம்பளம் மடத்திலிருந்தும் மீதி சம்பளம் கோயில் நிர்வாகமும் கொடுத்தது. இன்று தகுந்த வருமானம் வருகிறது.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
01-ஆக-202114:05:29 IST Report Abuse
vpurushothaman நகரத்தார் வழியைப் பின்பற்றலாமே? உண்டியல் வைத்தால்தானே " உண்டியல்" போடுகிறார்கள். பெசன்ட்நகர் அறுபடை விட்டுக்கு கோவிலுக்கு பாபுஜி அவசியம் கவனம் செலுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X