பொது செய்தி

இந்தியா

படைகள் 'வாபஸ்' எப்போது? சீனாவுடன் மீண்டும் பேச்சு!

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக, இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையேயான 12வது சுற்று பேச்சு நேற்று துவங்கியது. இதில் தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீற முயன்றது. எல்லையில் நம் படைகள் குவிக்கப்பட்டு, சீனாவின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு மே மாதத்தில்

புதுடில்லி: கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக, இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையேயான 12வது சுற்று பேச்சு நேற்று துவங்கியது. இதில் தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news



கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீற முயன்றது. எல்லையில் நம் படைகள் குவிக்கப்பட்டு, சீனாவின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் முகாமிட்டுள்ளன.பல சுற்று பேச்சுகளுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன.

அதே நேரத்தில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, படைகளை திரும்பப் பெறுவதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.இது தொடர்பாக, இரு ராணுவ எல்லை படைப் பிரிவின் தலைவர்கள் இடையேயான 12வது சுற்று பேச்சு நேற்று காலை துவங்கியது. சீனாவின் எல்லைக்குட்பட்ட மோல்டோ பகுதியில் இந்த பேச்சு நடக்கிறது.


latest tamil news



கடந்த 14 மாதங்களாக நீடித்து வரும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சமீபத்தில் நடந்தது.அப்போது, சீன வெளியுறவு அமைச்சர் யாங்க் யீயுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். எல்லைப் பிரச்னை, இரு தரப்பு உறவுக்கு பெரும் தடையாக உள்ளதாக ஜெய்சங்கர் அப்போது குறிப்பிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
01-ஆக-202110:45:34 IST Report Abuse
oce குரோனாவை கெளப்பி விட்டதுமில்லாமல் பார்டரில் தொந்தரவு வேறு கொடுக்கிறான்கள். அயோக்யன்கள்.
Rate this:
Cancel
01-ஆக-202109:14:08 IST Report Abuse
அப்புசாமி ஒண்ணு செய்யுங்க... இந்த முறை சீனா வாபஸ் வாங்கலேன்னா ஆத்மநிர்பராவின் கீழ் சீனாவிலிருந்து இறக்குமதியை இரட்டிப்பாக்ககிடுவோம்னு சொல்லிப்பாருங்க. சீனா, ஒத்துக்குட்டு வாபஸ் வாங்கிரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X