பொது செய்தி

இந்தியா

ஜே.பி.சி., விசாரணை கோரி கட்சிகள் ஜனாதிபதியிடம் மனு

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி-'வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தில் இறந்த விவசாயிகள் பற்றி, ஜே.பி.சி., எனப்படும், பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.டில்லியில் ஜனாதிபதிராம்நாத் கோவிந்தை அகாலி தளம், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்

புதுடில்லி-'வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தில் இறந்த விவசாயிகள் பற்றி, ஜே.பி.சி., எனப்படும், பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.



latest tamil news



டில்லியில் ஜனாதிபதிராம்நாத் கோவிந்தை அகாலி தளம், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு அமல் படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாய அமைப்புகள் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக டில்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.


latest tamil news



இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பலர் இறந்ததாக சந்தேகிக்கிறோம். இது பற்றி ஜே.பி.சி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விவசாயிகள் பிரச்னை, போன் ஒட்டு கேட்பு விவகாரம் ஆகியவை பற்றி பார்லிமென்டில் விவாதிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. சிவசேனா, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக்தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளும் இந்த மனுவில் கையெழுத்திட்டிருந்தன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஆக-202116:08:48 IST Report Abuse
பேசும் தமிழன் என்னடா எப்போதும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தானே கேட்பீர்கள்... இப்போ என்ன புதுசா வேற ஏதோ பெயரை சொல்லி கேட்கிறீர்கள்... நீங்கள் விவசாயிகளே கிடையது... கமிசன் ஆட்கள்
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
01-ஆக-202115:58:16 IST Report Abuse
vnatarajan மனுவில் ஏன் காங்கிரஸ் மற்றும் டிஎம்கே எதிர் கட்சிகள் கையெழுத்து இடவில்லை
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
01-ஆக-202113:15:38 IST Report Abuse
Suppan இதுவரை ஏழு கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் அளித்த பரிந்துரைகள் எவையும் அநேகமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் "தூங்கவைக்கப்" பட்டுள்ளன. இந்தக்குழுக்களால் சில அங்கத்தினர்களுக்குப் பொழுது போகும். அவ்வளவுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X