இந்தியா

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை.....ஆயினும் ஊரடங்கில் தளர்வுகளுக்கு அனுமதி

Added : ஆக 01, 2021
Share
Advertisement
புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தொற்று பரவல் குறைந்து வருவதால், மக்களின் வாழ்வாதாரம் கருதி, கடந்த ஏப்.24ம் தேதி முதல், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த முறை அறிவிக்கப்பட்ட தளர்வுடன் கூடிய ஊரடங்கு, நேற்று நள்ளிரவுடன் முடிந்தது. அதை தொடர்ந்து, ஊரடங்கில் மேலும் சில
தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை.....ஆயினும் ஊரடங்கில் தளர்வுகளுக்கு அனுமதி

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தொற்று பரவல் குறைந்து வருவதால், மக்களின் வாழ்வாதாரம் கருதி, கடந்த ஏப்.24ம் தேதி முதல், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த முறை அறிவிக்கப்பட்ட தளர்வுடன் கூடிய ஊரடங்கு, நேற்று நள்ளிரவுடன் முடிந்தது. அதை தொடர்ந்து, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளித்து, ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.புதிய தளர்வுகள்கொரோனா இரண்டாவது அலை காரணமாக, ஏப்ரல் மாதம் முதல் புதுச்சேரியில் சினிமா தியேட்டர்கள் திறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.தற்போது, மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்பட அனைத்து வகை சினிமா தியேட்டர்கள், 50 சதவீத பார்வையாளர்களுடன் இரவு 9.௦௦ மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளு, சாராயக்கடை ரெஸ்டாரண்ட் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள், காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. புதிய தளர்வில், 50 சதவீதம் பேருடன், சில்லரை விற்பனை பார்கள் திறக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் ஒன்று கூடுவதற்கான தடை தொடர்கிறது. அனைத்து மத வழிபாட்டு தலங்களில், இரவு 9.00 மணி வரை மக்கள் வழிபாட்டுக்கும் தரிசனத்திற்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே சமயம், நித்ய பூஜைகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு நீடிக்கிறது.

திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர், இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.தொடரும் தளர்வுகள்:அனைத்து அரசு அலுவலகங்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்கும். அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9.௦௦ மணி முதல் இரவு 9.௦௦ வரை திறந்திருக்கலாம். தனியார் நிறுவனங்கள் காலை 9.௦௦ மணி முதல் மாலை 6.௦௦ வரை செயல்படலாம்.ஓட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9.௦௦ மணி வரை இயங்கலாம்.

பஸ்கள், ஆட்டோ, டாக்ஸிகள் இரவு 9.௦௦ மணி வரை அனைத்து நாட்களிலும் இயங்கலாம் என்பது உட்பட, ஏற்கனவே அளிக்கப்பட்ட தளர்வுகள் தொடர்கின்றன. ஆய்வுதிறக்கப்பட்டுள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது.அதன்படி, அனைத்து கடைகளிலும் உரிமையாளர்கள், ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனரா என நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் ஆய்வு செய்து, உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X