பொது செய்தி

தமிழ்நாடு

ஆபாச பேச்சு வீடியோ: குவியுது புகார்

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
'பப்ஜி' விளையாட்டில் ஆபாசமாக பேசி, 'வீடியோ' வெளியிட்டதற்காக, பப்ஜி மதனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஆனால், அதை விடஆபாசமாக பேசியும், உடை அணிந்தும் தொடர்ச்சியாக, வீடியோ வெளியிடுபவர்களை, ஏன் கைது செய்யவில்லை எனக்கேட்டு, டி.ஜி.பி.,க்கு புகார்கள் குவிகின்றன.இது குறித்து, தென் சென்னை மாவட்ட காங்., செயலரும், ஒருங்கிணைந்த மகளிர் கூட்டமைப்பு தலைவியுமான

'பப்ஜி' விளையாட்டில் ஆபாசமாக பேசி, 'வீடியோ' வெளியிட்டதற்காக, பப்ஜி மதனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஆனால், அதை விடஆபாசமாக பேசியும், உடை அணிந்தும் தொடர்ச்சியாக, வீடியோ வெளியிடுபவர்களை, ஏன் கைது செய்யவில்லை எனக்கேட்டு, டி.ஜி.பி.,க்கு புகார்கள் குவிகின்றன.



latest tamil news



இது குறித்து, தென் சென்னை மாவட்ட காங்., செயலரும், ஒருங்கிணைந்த மகளிர் கூட்டமைப்பு தலைவியுமான புனிதவள்ளி கூறியதாவது:'யுடியூப் சேனல்' வழியாக, பலரும் தங்களுக்கு விருப்பப்பட்டதை வீடியோவாக்கி, பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதேநேரம், ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசி நடிக்கும் பலரும், அதை வீடியோவாக்கி, யூ டியூப் சேனலில் வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, திருச்சி இலக்கியா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் பதிவிடும் வீடியோக்கள், மிகவும்மோசமாக உள்ளன. தற்போது, கொரோனா காலகட்டம். பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், 'ஆன்லைன்' வாயிலாக படிக்கின்றனர். அதற்காக, இணைய வசதியுடன் கூடிய மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். அத்துடன், யுடியூப் சேனல்களையும் பார்க்கின்றனர். அப்போது, ஆபாச பேச்சு வீடியோக்களும் காட்சிக்கு வருகின்றன. அவற்றையும் பார்க்கும் எதிர்கால சமூகம் கெட்டு, குட்டிச்சுவர் ஆகி விடும். எனவே, ஆபாச பேச்சு வீடியோக்களை, யு டியூப் சேனலில் இருந்து எடுக்க வேண்டும். இனி, அவர்கள் பதிவிட முடியாதபடி செய்ய வேண்டும். கூடவே, இப்படி மோசமாக வீடியோ வெளியிடுபவர்கள் மீது, போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னை குறித்த புகாரை, டி.ஜி.பி., அலுவலகத்தில் கொடுத்தோம். உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினர்; இதுவரை எடுக்கவில்லை.எனவே, போராட்டம்நடத்துவது குறித்து யோசித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


'விசாரணை நடத்தப்படும்'

'பப்ஜி' மதன் மீது புகார்கள் வரிசையாக வந்தன. அதன்பின் விசாரித்து, அவர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி சாதனா, இலக்கியா, ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா ஆகியோர் பதிவிடும் வீடியோக்களை பார்த்து வருகிறோம். அவர்கள் மீதான புகார்களுக்கு வலுசேர்க்கும் ஆவணங்கள், 'சைபர் கிரைம்' போலீசால் சேகரிக்கப்படுகின்றன. விரைவில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக, அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். அப்போது கூட, அவர்கள் தவறை உணர்ந்தால், அவர்களுக்கு சிக்கல் இல்லாமல் போகலாம்.


latest tamil news



சைபர் க்ரைம் பிரிவு போலீஸ் அதிகாரி


'போலீஸ் என்ன செஞ்சிரும்?'

நான் எங்கும் ஆபாசமாக பேசவில்லை. அப்படி எதுவும் பதிவு போட்டிருந்தால், அதை அனுப்புங்கள்; பார்க்கிறேன். என் பதிவு பிடிக்கவில்லை என்றால், பார்க்காமல் இருந்து விட வேண்டியது தானே. அதை பார்த்து விட்டு, எதற்கு ஆபாசமாக இருக்கிறது என, சொல்ல வேண்டும்; போலீசில் எதற்காக புகார் கொடுக்க வேண்டும்; அப்படியே கொடுத்தாலும் போலீஸ், இதில் என்ன நடவடிக்கை எடுத்து விட முடியும்?

இலக்கியா, 'யுடியூப் சேனல்' வீடியோ பதிவாளர்.
- நமது நிருபர் --

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
01-ஆக-202118:15:13 IST Report Abuse
Rajas /////என் பதிவு பிடிக்கவில்லை என்றால், பார்க்காமல் இருந்து விட வேண்டியது தானே. அதை பார்த்து விட்டு, எதற்கு ஆபாசமாக இருக்கிறது என, சொல்ல வேண்டும் போலீசில் எதற்காக புகார் கொடுக்க வேண்டும்//// சட்டமும் தெரியவில்லை, சமூக அக்கறையும் இல்லை. இன்னொருவனை திட்டினாலே கேஸ் வரும். அது கூட புரியாத ஆட்கள் இவர்கள். இந்தியாவில் எல்லோரும் அப்படி தான் இருக்கிறார்கள். நான் வேகமாக வண்டியை ஓட்டுவேன். ஏனென்றால் இது என் வண்டி என்ற எண்ணம் தான் இங்கே அதிகமாக உள்ளது. பள்ளிகளில் அடிப்படை சட்டத்தை ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
01-ஆக-202116:43:38 IST Report Abuse
M  Ramachandran திமிர் அதிகம் போலிஸ்சால் என்ன செய்துவிடும் என்று மிரட்டல் விடும் வரை போலிசு எதற்கு கத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டியது தானென.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
01-ஆக-202116:18:09 IST Report Abuse
vnatarajan பள்ளி காலேஜ் மாணவ மாணவிகள் ஆன் லைனில் படிக்கும் நேரத்தைவிட இந்த மாதிரி யு டியூபில் தான் நேரத்தை வீணடிக்கிறார்கள் எப்போதும் இவர்களை பெற்றோர்கள் அல்லது தாத்தா பாட்டிகளால் கண்காணித்து கொண்டிருக்கமுடியவில்லை. இதனால் குழந்தைகளின் கவனம் ஒழுக்கமற்ற வழிகளில் சிதறி விடப்படுகிறது. அதனால் அவர்களின் வாழ்க்கை திசைமாறி போக இந்த வீடியோக்கள் வழி வகுக்கின்றன ஆகையால் சைபர் க்ரைம் போலீசார் தேவையான நடவடிக்கை எடுத்து இப்படிப்பட்ட யு ட்யூபுககளுக்கு முற்று புள்ளி வைக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X