'பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் நூலகம் அமைக்க வேண்டாம்': அண்ணாமலை

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (58)
Advertisement
சென்னை-'பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில், கருணாநிதி நுாலகம் அமைக்க வேண்டாம். மக்களின் எண்ணங்களுக்கும், மன உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, நுாலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தென் மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி, பசுமையை நிலைக்க செய்தார், ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக். அரசு கட்ட மறுத்த

சென்னை-'பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில், கருணாநிதி நுாலகம் அமைக்க வேண்டாம். மக்களின் எண்ணங்களுக்கும், மன உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, நுாலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.latest tamil news


அவரது அறிக்கை:தென் மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி, பசுமையை நிலைக்க செய்தார், ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக். அரசு கட்ட மறுத்த அணையை, தன் சொந்த செலவில், நாட்டு மக்களுக்காக கட்டி கொடுக்க முன்வந்த மனித தெய்வமாக வணங்கப்படுபவர், பென்னி குவிக்.தன்னமலற்ற அந்த தியாக உள்ளத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், மதுரை, நத்தம் சாலையில், அன்னாரின் நினைவாக, இரண்டு ஏக்கரில் நினைவு மண்டபம் கட்டி, பென்னி குவிக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கப்பட்டது.

தற்போது, ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க., அரசு, பென்னி குவிக் நினைவு மண்டபத்திலே, கருணாநிதியின் பெயரால், ஒரு நுலகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு, தென் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளையும், பொது மக்களையும் வெகுவாக பாதித்துஇருக்கிறது.முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிறப்பு செய்ய நினைக்கும் தி.மு.க., அரசுக்கு, அவரின் பெயரில் நுாலகம் அமைக்க, வேறு எந்த கட்டடமும் கிடைக்கவில்லையா என, தென் மாவட்ட மக்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news


புத்தகங்கள் வரலாற்று பெட்டகங்கள் தான். ஆனால், அது இன்னொரு வரலாற்று சின்னத்தை அழித்து உருவாக்கப்பட வேண்டுமா என்றும், மக்கள் போராட தயாராகி வருகின்றனர்.கருணாநிதி பெயரால் அமையும் நுாலகத்தை, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இதை தான், அவரின் ஆன்மாவும் விரும்பும். மக்களின் எண்ணங்களுக்கும், மன உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, கருணாநிதி பெயரால் அமையும் நுாலகத்தை, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
01-ஆக-202121:35:34 IST Report Abuse
vivek c mani இது தேவைதானா. ஒருவர் நினைவுச்சின்னத்தில் மற்றொறுவர் நினைவை நிலைநாட்ட நூலகம் அவசியமென்ன? வேறிடம் தேடலாமே .
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
01-ஆக-202119:18:46 IST Report Abuse
Dhurvesh இவர்கள் எல்லாம் நுனி புள் கூட்டம் இன்னும் இடம் எது என்று அறிவிக்கவில்லை , இப்படி தான் lottery என்று ரோட்டில் போறவன் சொன்னனான் என்று சொல்லி எதாலயோ அடிச்சார் PTR அப்பவும் அடங்க மறுக்கும் கூடம்
Rate this:
E. RAJAVELU - Chennai,இந்தியா
02-ஆக-202117:05:11 IST Report Abuse
E. RAJAVELU... வாங்கறதே இவனுங்களுக்கு பொழப்ப போச்சு....
Rate this:
Cancel
01-ஆக-202117:01:42 IST Report Abuse
அருணா இது ஒருவகை விளம்பரமே. பின் நாளில் எங்கள் கட்சி நூலக இடம் என்று சொல்லிக் கொள்ளலாம். எல்லா வற்றையும் தொலை நோக்காக பார்க்க வேண்டும். துண்டு சீட்டில் இருந்து மக்கள் விடு பட வேண்டும் அல்லவா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X