பொது செய்தி

இந்தியா

நீதிமன்றங்களில் மாநில மொழிகள்; வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: ''நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் தீர்ப்பு வெளியிடப்படும் நிலை உருவாக வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.'தெலுங்கு கூட்டமி' எனப்படும் தெலுங்கு மொழி அமைப்பின் சார்பில் மாநாடு நடக்கிறது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: கடந்த, 21 ஆண்டுகளாக கணவனை பிரிந்திருந்த ஆந்திராவைச்
Venkaiah Naidu, Court, Regional Language, வெங்கையா நாயுடு, மொழிகள், நீதிமன்றம்

புதுடில்லி: ''நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் தீர்ப்பு வெளியிடப்படும் நிலை உருவாக வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

'தெலுங்கு கூட்டமி' எனப்படும் தெலுங்கு மொழி அமைப்பின் சார்பில் மாநாடு நடக்கிறது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: கடந்த, 21 ஆண்டுகளாக கணவனை பிரிந்திருந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண், கணவருடன் சேர்ந்து வாழ சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால் தாய் மொழியான தெலுங்கில் பேசுவதற்கு அந்த பெண்ணுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக தலைமை நீதிபதி என். வி. ரமணாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறேன்.


latest tamil newsநீதிமன்றங்களில் தங்கள் தரப்பு வாதத்தை தாய் மொழியில் எடுத்துரைக்கும் வாய்ப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், நீதிமன்றத் தீர்ப்புகளும் மாநில மொழியில் இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் சுட்டிக் காட்டுகிறது. ஆரம்பப் பள்ளி வரையிலும் தாய் மொழியிலேயே பாடங்களை கற்பிக்க வேண்டும். நிர்வாகத்திலும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இந்திய மொழிகளை பாதுகாக்க, புதுமையான கூட்டு முயற்சி தேவை. மக்கள் இயக்கம் மூலமே, மொழிகளை பாதுகாக்க முடியும். எதிர்கால சந்ததியினருக்கு நம் மொழிகளின் வளம் குறித்து தெரிய வேண்டும்.

மொழிகளின் வளர்ச்சியில் மொழி பெயர்ப்புக்கும் முக்கிய பங்கு உள்ளது. நம் பண்டைய இலக்கியங்கள் உள்ளிட்ட நுால்களை பல மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும். இளைஞர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அவை எளிமையான நடையில் இருகக வேண்டும். இந்த நோக்கத்துடனே புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. தாய் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதையே அது வலியுறுத்துகிறது. நம் கலாசாரம், மொழி, பாரம்பரியம் ஆகியவை உள்ளடக்கியதே சிறந்த கல்வியாக இருக்க முடியும். தாய் மொழியை பராமரிக்க பல நாடுகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆராய்ந்து, பயன்படுத்த வேண்டும்.

பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் தாய் மொழியிலேயே மருத்துவம், பொறியியல், சட்டம் தொடர்பான பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆங்கிலத்திலும் அவர்கள் சிறந்தவர்களாக உள்ளனர். தாய் மொழியை கற்கும் அதே நேரத்தில் மற்ற பிராந்திய மொழிகளையும் கற்கும் வாய்ப்பு, நம் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- புதுடில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லைன்னு புரியுது இவர் ஒரு மதராஸி என்பதே ஒரே டிஸ்குவாலிஃபிகேஷன்
Rate this:
Cancel
விசு பாய் , சென்னை இங்கு இவ்வளவு பேசும் உளுத்தம்பருப்புகள் மற்ற பிராந்திய மொழிகளையும் கற்க வழி விட வேண்டும் என்று கூறியதை படிக்கவில்லையா?
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
01-ஆக-202114:27:12 IST Report Abuse
vpurushothaman கல்வி நிலையங்களில் பயிற்சி மொழியாக - சட்ட மன்ற ஆட்சி மொழியாக - நீதி மன்ற நிர்வாக மொழியாக என்று தாய் மொழி இடம் பெறுகிறதோ அன்றே இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வந்ததாக அர்த்தம். இல்லையெனில் ஆகஸ்டு பதினைந்து போர் முறை மாற வேண்டும் போர் முனை மாற வேண்டும் என்றே பொருள். ஆங்கிலமே தொடர்ந்தால் அதுதானே வழி? துணை ஜனாதிபதி கூற்று நூற்றுக்கு நூறும் போற்ற வேண்டிய - நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X