பொது செய்தி

தமிழ்நாடு

6 ஆண்டுகளாக 12,000 கிராம சேவா மையங்கள் மூடல்

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மதுரை: மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கட்டப்பட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சேவா மையங்கள் தமிழக அரசின் மெத்தனத்தால் 6 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளன.பட்டா மாறுதல் துவங்கி மின் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்புக்கு பதிவு செய்வது, ரயில் டிக்கெட் பெறுவது, சான்றிதழ்கள் பெறுவது உட்பட அனைத்து சேவைகளையும் கிராம சேவா மையத்தில்
6 ஆண்டுகளாக 12,000 கிராம சேவா மையங்கள் மூடல்

மதுரை: மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கட்டப்பட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சேவா மையங்கள் தமிழக அரசின் மெத்தனத்தால் 6 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளன.

பட்டா மாறுதல் துவங்கி மின் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்புக்கு பதிவு செய்வது, ரயில் டிக்கெட் பெறுவது, சான்றிதழ்கள் பெறுவது உட்பட அனைத்து சேவைகளையும் கிராம சேவா மையத்தில் பொதுமக்கள் பெறலாம். தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்திற்கு அலைய வேண்டியதில்லை. ஒவ்வொரு மையமும் அடிப்படை வசதிகளுடன் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டன. தமிழக அரசின் சார்பில் கம்ப்யூட்டர், வேலையாட்கள், நெட்வொர்க் வசதி செய்து தர வேண்டும். ஆறாண்டுகளாகியும் தமிழக அரசு இம்மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.


latest tamil news


பாரதிய கிசான் சங்க தேசிய செயலாளர் பெருமாள் கூறுகையில், "பல நுாறு கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு கட்டடம் கட்டி தந்ததோடு நெட்வொர்க் சேவைகளுக்காக தமிழக அரசுக்கு நிதி வழங்கியுள்ளது. ஆனால் செலவிடாமல் அப்படியே வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசிடம் விசாரிக்ககோரி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்," என்றார்.


latest tamil news




latest tamil news


Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஆக-202123:11:03 IST Report Abuse
அப்புசாமி 6 வருஷமாவா? ... அரசுடன் இணக்கமான அம்மா ஆட்சி நடந்ததே... அப்படியுமா?
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
01-ஆக-202116:49:19 IST Report Abuse
vnatarajan இந்த கிராம சேவை மையங்களை ஏன் கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை என்ற காரணத்தை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த ஏடிஎம்கேதான் மக்களுக்கு தெரெய்விக்கவேண்டும்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
01-ஆக-202114:20:16 IST Report Abuse
vpurushothaman சேவா மையங்களைச் செயல்படுத்துங்கள். கிராமங்கள் செழிப்படையட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X