பொது செய்தி

தமிழ்நாடு

'கியர் ராடு' இல்லாமல் அரசு பஸ்: திருப்பூரில் பயணிகள் அதிர்ச்சி

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
திருப்பூர்: குமுளியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ்சில், 'கியர் ராடு'க்கு பதில் இரும்பு பைப் வைத்து இயக்கப்பட்டது. இதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.தேனி மாவட்டம், குமுளியில் இருந்து தாராபுரம் வழியாக திருப்பூருக்கு அரசு பஸ் (டி.என்., 39 என் 0339) நேற்று முன்தினம் மாலை இயக்கப்பட்டது. பஸ்சின் கியர் ராடு கழன்றிருந்தது. இதனால் இரும்பு பைப்பை இணைத்து, கியர்
திருப்பூர், அரசு பஸ், கியர் ராடு

திருப்பூர்: குமுளியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ்சில், 'கியர் ராடு'க்கு பதில் இரும்பு பைப் வைத்து இயக்கப்பட்டது. இதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேனி மாவட்டம், குமுளியில் இருந்து தாராபுரம் வழியாக திருப்பூருக்கு அரசு பஸ் (டி.என்., 39 என் 0339) நேற்று முன்தினம் மாலை இயக்கப்பட்டது. பஸ்சின் கியர் ராடு கழன்றிருந்தது. இதனால் இரும்பு பைப்பை இணைத்து, கியர் மாற்றி தற்காலிகமாக பஸ் டிரைவர் இயக்கியுள்ளார்.இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்து மொபைல் போனில் படம் எடுத்து சமூகவலை தளங்களில் பரப்பினர்.


latest tamil news


பஸ் திருப்பூர் வந்தவுடன் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிவிட்டு பணிமனைக்கு டிரைவர் பஸ் ஓட்டி சென்றார்.

திருப்பூர் பணிமனை மேலாளர் ஆறுமுகம் கூறுகையில், ''பஸ் வரும் வழியில் கியர் ராடு இணைப்பு திடீரென கழன்று விட்டது. தற்காலிகமாக இயக்க, இரும்பு பைப்பை டிரைவர் பயன்படுத்தியுள்ளனர். டிரைவர், நடத்துனரிடம் விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rasu -  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-202102:28:13 IST Report Abuse
rasu இன்னும் நிறைய எதிர் பாக்கலாம் மக்களே wait...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-ஆக-202100:37:12 IST Report Abuse
தமிழவேல் இயலாத சமயத்தில், செகண்ட் கியரிலேயே தொடர்ந்து ஓட்டி சென்றடைய முடியும். ஆனால், எண்னை செலவு அதிகமாகும்.
Rate this:
Cancel
01-ஆக-202123:04:29 IST Report Abuse
அப்புசாமி இந்த பஸ்ஸைத்தான் ரெண்டு வருஷம் முன்னாடி பச்சைக் கொடி காட்டி ஆரம்புச்சு வெச்சாங்க.அம்மாவின் பெயரில் ஆட்டையப்போட்ட ஆட்சி . இப்போ கட்டுமரக் காரர்களின் கைக்கு போயிருக்கு. பஸ்ஸே காணாமப் போயிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X