சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

Added : ஆக 01, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் உழவர் சந்தையில் 80 கடைகள் உள்ளன தினமும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த சில நாட்களாக உழவர் சந்தை அருகிலுள்ள சாலையோரம் வியாபாரிகள் கடை போட்டதால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் நாள் ஒன்றுக்கு 17 டன் காய்கறிகள் விற்பனை செய்யும் உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக 12
மேட்டூர், உழவர் சந்தை, விவசாயிகள், உள்ளிருப்பு போராட்டம்

மேட்டூர்: மேட்டூர் உழவர் சந்தையில் 80 கடைகள் உள்ளன தினமும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த சில நாட்களாக உழவர் சந்தை அருகிலுள்ள சாலையோரம் வியாபாரிகள் கடை போட்டதால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் நாள் ஒன்றுக்கு 17 டன் காய்கறிகள் விற்பனை செய்யும் உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக 12 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனையாகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலையோர கடைகளை அகற்றக்கோரி இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு உழவர் சந்தை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே நிலை நீடித்தால் சாலையோரத்தில் நாங்களும் கடையை போடுவோம் என தெரிவித்தனர்

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X