போலீசாக நடிப்பதில் செம கெத்து: ஐஸ்வர்யா ராஜேஷ் குஷி| Dinamalar

போலீசாக நடிப்பதில் செம கெத்து: ஐஸ்வர்யா ராஜேஷ் குஷி

Added : ஆக 01, 2021 | |
தமிழ் சினிமாவில் புதிய கோணத்தில் நடிப்பை வெளிப்படுத்தி, தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி, வித்தியாசமான கதைகளில் கதாபாத்திரமாக வாழ்ந்து, முன்னணி நடிகையாக புகழ் வானில் நட்சத்திரமாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் குஷியாக பேசிய நிமிடங்கள் இதோ... 'திட்டம் இரண்டு' படத்தில் போலீசாக நடித்த அனுபவம் ஜீப்ல வந்து இறங்கும் போதெல்லாம் செம கெத்தா இருந்தது... இரண்டாம் கட்ட
போலீசாக நடிப்பதில் செம கெத்து: ஐஸ்வர்யா  ராஜேஷ் குஷி

தமிழ் சினிமாவில் புதிய கோணத்தில் நடிப்பை வெளிப்படுத்தி, தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி, வித்தியாசமான கதைகளில் கதாபாத்திரமாக வாழ்ந்து, முன்னணி நடிகையாக புகழ் வானில் நட்சத்திரமாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் குஷியாக பேசிய நிமிடங்கள் இதோ...'திட்டம் இரண்டு' படத்தில் போலீசாக நடித்த அனுபவம்


ஜீப்ல வந்து இறங்கும் போதெல்லாம் செம கெத்தா இருந்தது... இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஊரடங்கு வந்ததால் சாப்ட்டு, துாங்கி வெயிட் போட்டேன். 'என்னம்மா போலீஸ் கேரக்டர் பண்ற நீங்க பொத பொதனு வந்திருக்கீங்கனு' இயக்குனர் விக்கேனஷ் கார்த்திக் சொல்லிட்டாரு. இப்போ கொஞ்சம் வெயிட் குறைச்சு இருக்கேன்.' திட்டம் இரண்டு' கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்


காணாமல் போன என் பிரண்டு ஒரு பொண்ணு என்ன ஆனாங்க, கண்டுபிடித்தார்களா என்பது தான் கதை. தமிழ்ல புதுசா இருக்கும் ரொம்ப திரில்லான அனுபவம் பக்கம், பக்கமா டயலாக் எல்லாம் இல்லை. ரொம்ப எமோஷனலா இருக்கும் இந்த படம்.'காக்கா முட்டை', 'கனா'வுக்கு பின் ஹீரோயினாக நீங்கள்...


ஆமா... இது பெரிய சுமை தான். கண்டிப்பா நல்ல கதையை தேர்ந்தெடுத்து பண்ணனும். ஹீரோயின் கேரக்டரில் ஜெயிக்கிறது கஷ்டம்.என் படங்களை குடும்பத்துடன் பாக்கணும்னு விரும்புவேன் அப்படி ஒரு படம் தான் 'திட்டம் இரண்டு'.


சின்னத்திரை டூ பெரியதிரை உங்கள் பயணம் எப்படி


நல்லா இருக்கு, 'தர்மதுரை', 'க/பெ.ரணசிங்கம்' என ஒவ்வொரு படத்திலும் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன். நான் எப்பவும் இயக்குனரின் நடிகை. அவங்க எழுதும் கதையை நடிப்பில் கொண்டு வர விரும்புவேன். மக்கள் என்னை நேசிப்பதில் சந்தோஷம்.தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் நிறைய படங்கள்


சமீபத்தில் தெலுங்கில் நிறைய படங்கள் வந்துச்சு.முதல்ல விஜய் தேவர கொண்டா உடன் ஒரு படம் நடித்தேன். அதில் 'சுவர்ணா' கேரக்டர் மக்களுக்கு பிடித்தது. தொடர்ந்து நல்ல கதைகள் தெலுங்கில் பண்ண விரும்புகிறேன் எங்கிருந்து போனாலும் நல்ல வரவேற்பு இருக்கிறது பெருமையா இருக்கு.நீங்கள் அதிகம் இணைந்து நடித்த விஜய்சேதுபதி பற்றி


விஜய்சேதுபதி ஒரு புத்தகம்... கதையில் சந்தேகம் வந்தா அவரிடம் கேட்பேன், 'காக்கா முட்டை' பண்ணும் போது வேறுபடத்தில் ஹீரோயின் வாய்ப்பு வந்தது. 'ஹீரோயினா எப்போ வேணும்னாலும் பண்ணலாம் 'காக்கா முட்டை'பண்ணினால் இயக்குனர் மணிகண்டனிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம்னு சொன்னாரு. அந்த படம் பெரிய திருப்புமுனையா இருந்தது.


தினேஷ், விஜய்சேதுபதி, தனுஷ், விக்ரம் இப்படி நிறைய நடிகர்களுடன் நடிக்கிறீர்கள். படப்பிடிப்பு தளத்தில் எப்படி

சேது, தனுஷ், விக்ரம் பார்த்தாலே கொஞ்சம் பயம் வரும், அதே மாதிரி வடசென்னை படத்தில் தனுஷ் கூட நடிக்கும்போது பயம் இருந்தது, ரீடேக் போக கூடாது என்று வேண்டிப்பேன். அது என்னமோ தெரியல பெரிய நடிகர்களுடன் நடிக்கும் போது ஒருவித பயம் பதட்டம் இருக்கும். சமீபத்தில் ஒரு ஆந்தாலஜி படத்துல நடிச்சேன்; அதுல அந்த படக்குழுவினர் எல்லாம் ஐஸ்வர்யா வந்தா ஒரே டேக்கில் முடிச்சிடுவாங்கனு சொன்னாங்க, அதனால் அந்த காட்சி எடுக்கும் போது ரொம்ப பயந்து பதட்டமானேன்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X