ஆத்தூர் அருகே மயான பகுதியில் சாராயம் விற்பனை: 2 வாலிபர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆத்தூர் அருகே மயான பகுதியில் சாராயம் விற்பனை: 2 வாலிபர்கள் கைது

Added : ஆக 01, 2021
Share
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் இன்று, ஆத்தூர் டி.எஸ்.பி., இம்மானுவேல்ஞானசேகரன் தலைமையிலான, ஆத்தூர் ஊரக போலீசார் ஆய்வு செய்தனர்.பொது மயான பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை, மேல் கெடார் கிராமத்தை சேர்ந்த, சுரேஷ், 30, வெங்கடேஷ், 30, ஆகியோரை கைது செய்தனர்.
ஆத்தூர், மயான பகுதி, சாராயம் விற்பனை,வாலிபர்கள் ,கைது


ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் இன்று, ஆத்தூர் டி.எஸ்.பி., இம்மானுவேல்ஞானசேகரன் தலைமையிலான, ஆத்தூர் ஊரக போலீசார் ஆய்வு செய்தனர்.

பொது மயான பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை, மேல் கெடார் கிராமத்தை சேர்ந்த, சுரேஷ், 30, வெங்கடேஷ், 30, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் 90 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சண்டைக்காரன்புதூர் கிராமத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடினர். அவர்களிடமிருந்து ஒரு லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர் இருவேறு இடங்களில், மொத்தம் 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து, ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X