சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபோதையில் கொலை: ஐந்து பேர் கைது

Added : ஆக 01, 2021
Share
Advertisement
கோவை:மதுபோதையில் நண்பரை கொலை செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம் விஜயநாராயணபுரத்தை சேர்ந்தவர் மணி, 30. கோவை சிங்காநல்லுாரில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். இவரது நண்பர் சிங்காநல்லுாரை சேர்ந்த செந்தில், 30.நேற்று முன்தினம் செந்தில், மணி இருவரும் ஒண்டிபுதுாரில் உள்ள தோட்டத்துக்கு சென்றனர். அங்கு செந்திலின் சகோதரர், ரகுராம், அவரது நண்பர்கள்,

கோவை:மதுபோதையில் நண்பரை கொலை செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம் விஜயநாராயணபுரத்தை சேர்ந்தவர் மணி, 30. கோவை சிங்காநல்லுாரில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். இவரது நண்பர் சிங்காநல்லுாரை சேர்ந்த செந்தில், 30.நேற்று முன்தினம் செந்தில், மணி இருவரும் ஒண்டிபுதுாரில் உள்ள தோட்டத்துக்கு சென்றனர். அங்கு செந்திலின் சகோதரர், ரகுராம், அவரது நண்பர்கள், அனிஷ்குமார், அஜித்குமார், ஆன்டனி, சத்யா ஆகியோர் கறி சமைத்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.அவர்களுடன் இணைந்து செந்தில், மணி மது அருந்தினர். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், ரகுராமின் நண்பர் அனிஷ்குமனர் கத்தியால் மணியை குத்தினார். பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த ஐந்து பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X